இது அறிவுப்பூர்வமான விளையாட்டு! இங்கே காங்கிரசுக்கு என்ன வேலை?

 
ச்


கூட்டணியில் இருக்கும் திமுக அரசின் முயற்சியால்தான் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று முதல் துவங்குகிறது.    ஆனால் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் இந்த விழாவை புறக்கணித்திருக்கிறது.  பிரதமர் மோடி இந்த விழாவை தொடங்கி வைக்கிறார் என்பதால்  இந்த விழாவை காங்கிரஸ் கட்சி புறக்கணிப்பதாக அறிவித்திருக்கிறது.

ர்

இதுகுறித்து தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப் பெருந்தகை,  ‘’உக்ரைன் போர் காரணமாக 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை ரஷ்யாவில் நடத்தும் முடிவினை கைவிடுவதாக சர்வதேச கூட்டமைப்பு அறிவித்தது.  இதை அடுத்து இந்த போட்டியை தங்கள் நாடுகளில் நடத்துவதற்கு பல்வேறு நாடுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தன.  அகில இந்திய செஸ் கூட்டமைப்பு இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட்டை நடத்த வேண்டும் என்று பல முயற்சிகளை முன்னெடுத்து வந்தது.

ன

 188 நாடுகளில் இருந்து ஏறத்தாழ 2500 வீரர்கள் கலந்து கொள்ளும் செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்துவதற்கு மற்ற மாநிலங்கள் தயங்கிய நிலையில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் இந்த போட்டியை எடுத்து நடத்திட தமிழகம் விரும்புகிறது என்று துணிச்சலாக முடிவெடுத்து செயல்படுத்தி இருக்கிறார்.  தமிழகத்திற்கு பெருமை சேர்த்து இருக்கிறார் என்று பாராட்டும் செல்வப் பெருந்தகை,  ஜனநாயகத்திற்கு எதிராகவும் , எதிர்க்கட்சிகளின் குரல்ளையை நசுக்கும் வகையிலும் செயல்படும் பாஜக அரசியல் கொள்கைகளை எதிர்த்து பிரதமர் மோடி துவங்கி வைக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிகழ்வுகளை தமிழக சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் புறக்கணிக்கின்றோம் என்று தெரிவித்திருக்கிறார்.  அதே நேரம்,  இது பிரதமர் மோடிக்கு எதிரானது தானே தவிர செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு எதிரானது அல்ல என்கிறார்.

இதுகுறித்து தமிழக பாஜக துணைத்தலைவர்  நாராயணன் திருப்பதி, ’’சரி தான். இது அறிவு பூர்வமான  விளையாட்டு. ஆகவே,  தமிழ்நாடு காங்கிரஸ் புறக்கணிப்பது சரியான முடிவே.’’என்கிறார்.