எடப்பாடியை சிஎம் ஆக்கியதே பாஜகதான் - நயினார் நாகேந்திரன்

 
ன

எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் ஆக்கியதே பாஜகதான் என்கிறார் நயினார் நாகேந்திரன்.  ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அதிமுக பாஜகவுடன் கூட்டணியை தொடர்ந்து வருகிறது.  சட்டமன்றத் தேர்தல்,  நாடாளுமன்றத் தேர்தல் என்று இரு கட்சிகளும் இணைந்து தேர்தலை சந்தித்து வந்தன.  அதிமுகவில் பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கும் போதெல்லாம் ஓ. பன்னீர்செல்வம்,  எடப்பாடி பழனிச்சாமி இருவரும் டெல்லி செல்வதும் அங்கே பிரதமர் மோடியையும், அமித்ஷாவையும் நேரில் சந்திப்பதையும் வழக்கமாக வைத்திருந்தனர்.

 இந்த நிலையில் தற்போது அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில் ஓபிஎஸ் -இபிஎஸ் இடையே மீண்டும் மோதல் வெடித்திருக்கும்  அது குறித்து நயினார் பதில் அளித்து இருக்கிறார்.

தி

 திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினரும்,  தமிழக பாஜகவின் துணைத் தலைவருமான நயினார் நாகேந்திரன்  திருச்செந்தூரில் சுவாமி தரிசனத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.   அப்போது அதிமுகவின் மோதல் விவகாரம் குறித்து கேள்விக்கு,   தலைவர்களின் மறைவுக்கு பின்னர் இடைவெளியில் அதிமுக கட்சியில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படுவது வழக்கம்.   அதிமுகவில் தற்போது ஒற்றை தலைமை பிரச்சனை.  அது  அந்தக் கட்சியின் விவகாரம். ஒற்றை தலைமை பிரச்சனையை யார் ஆரம்பித்தார்கள் என்பது எல்லாருக்கும் தெரியும்.   இது எடப்பாடி பழனிச்சாமிக்கும்- ஓ. பன்னீர்செல்வத்திற்கும் இடையே உள்ள தனிப்பட்ட பிரச்சனை என்றார்.

 தொடர்ந்தது  பேசிய நயினார் நாகேந்திரன்,   எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் ஆக்கியதே பாஜக தான் என்றார்.