நீயே ஹீரோயின்னு சொல்லிட்டு திரியும் போது அவரு சூப்பர் ஹீரோன்னு நினைக்குறதுல தப்பில்ல...

 
gச்

 தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை,  அக்கட்சியில் இருந்து வெளியேறிய நடிகை காயத்ரி ரகுராம் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார். இண்டிகோ விமானத்தில் தேஜஸ்வி சூர்யா எம்பியுடன் அண்ணாமலை சென்றபோது விமானத்தின் அவசரக் கதவை தேஜஸ்வி சூர்யா திறந்த விவகாரத்தில் கடுமையாக விமர்சித்து வருகிறார் காயத்ரி ரகுராம்.

 தேஜஸ்வி சூர்யா மன்னிப்பு கேட்டதாக  மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் சொன்ன பிறகும் கூட காயத்ரி ரகுராம் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இதற்கு அண்ணாமலையின் ஆதரவாளர் திருச்சி சூர்யா சிவா பதிலடி கொடுத்து வருகிறார்.

அ

’’வாய்வாய்.. உண்மை புதைந்து விடும் என்று நினைத்தான். அவர் 1 சூப்பர் ஹீரோ என்று நினைக்கிறார்.  விமானத்தின் அவசர வெளியேறும் கதவைத் திறந்து 4 பேரை தொங்கவிடுவாராம். மன உறுதியற்ற ஒரு முட்டாள் மட்டுமே இப்படிப் பேசுவான். தனது தவறை உணராமல் விமான பயணிகளுக்கு வெளிப்படையாக உயிர் அச்சுறுத்தல்’’என்று விளாசி எடுத்திருக்கிறார் காயத்ரி.

இதற்கு பதிலடியாக சூர்யா சிவா,  ‘’வாய்வாய்.. நீயே ஹீரோயின் சொல்லிட்டு திரியும் போது அவரு சூப்பர் ஹீரோன்னு நினைப்பதில் தவறில்லை. மெயின் டோர் பேக் டோர் எமர்ஜென்சி டோர் என்று எல்லாத்தையும் உங்களுக்கு தெளிவாக யூஸ் பண்ண தெரியும் பாவம் அவருக்கு அந்த அளவுக்கு அனுபவம் இல்லை’’என்று கடுமையாக சாடியிருக்கிறார்.

அடுத்து,  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட அண்ணாமலை சவாலுக்கு நீங்கள் தயாரா? என்ற காயத்ரியின் கேள்விக்கு,

’’காயத்ரி சவாலுக்கு நீங்கள் தயாரா? இன்டர்வியூ எப்ப வெச்சுக்கலாம். 234 தொகுதியில் ஏன் இவ்வளவு ஆர்வமா ஈரோடுல இருக்குறீங்கன்னு இப்பதான் தெரியுது ஊரு பேருலயே ரோடு இருக்குது என்பதற்காகவா?’’என்று கடும் தாக்குதல் தொடுத்திருக்கிறார் சூர்யா சிவா.