நான் அமைச்சராக இருக்கும் வரை அதை வெளியிட முடியாது... சலசலப்புக்கு பிடிஆர் விளக்கம்

 
ப்
ப்ட்

அமைச்சர் பி. டி. ஆர். பழனிவேல் தியாகராஜன் இப்போது புத்தகம் எழுதிக் கொண்டிருப்பதாகவும்,  அதை அரசியலில் இருந்து வெளியேறிய பின்னர் வெளியிட திட்டமிட்டு இருப்பதாகவும் கூறியது கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. 

பிடிஆருக்கு கட்சிக்குள் அதிருப்தி என்ன ஏற்பட்டது?   இப்போது வெளியிட முடியாத அளவிற்கு புத்தகத்தில் அவர் என்னை எழுதுகிறார் என்றெல்லாம் சலசலப்பு எழுந்தன. அதற்கு ஒரு அவரே விளக்கம் அளித்திருக்கிறார்.

ப்

 புத்தாண்டை முன்னிட்டு நிதியமைச்சர் பி. டி. ஆர். பழனிவேல் தியாகராஜனை சந்தித்து பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.   வாழ்த்து தெரிவித்தவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றிய அமைச்சர் பி. டி. ஆர்.,   ‘எந்த மனிதனும் ஒரே நதியில் இரண்டு முறை அடி எடுத்து வைப்பது இல்லை.  ஏனென்றால் அது ஒரே நதி அல்ல. அவன் ஒரே மனிதன் அல்ல’ என்கிற மேற்கோளை குறிப்பிட்டிருந்தார்.  இது கிரேக்க தத்துவத்தில் இருந்து தோன்றிய மேற்கோள்.  மாற்றங்கள் எவ்வாறு நடைபெறுகின்றன நாம் எவ்வாறு மாறுகிறோம் என்பதை பற்றி சிந்திக்கும் விதமான மேற்கோள் ஆகும் . 

இதை பதிவேற்றியதோடு 2023 ஆம் ஆண்டு மகிழ்ச்சியாக அமைய எனது வாழ்த்துக்கள்.  தவிர்க்க முடியாத மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் நேரம் இது . கடந்த ஆண்டில் ஏற்பட்ட முன்னேற்றங்களின் மதிப்பையும் புதிய நம்பிக்கைகளுக்குமான உறுதி மொழியையும் ஏற்கின்ற நேரம் இது.  நான் எதிர்கொண்டதில் கொண்டு வரும் மாற்றங்கள் குறித்து புத்தகத்தை எழுத தொடங்கி இருக்கிறேன்.  அரசியலில் இருந்து வெளியேறிய பின்னர் அந்த புத்தகத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறேன் என குறிப்பிட்டு இருந்தார். 


 அமைச்சர் பி. டி .ஆர் அதிர்ச்சியில் இருக்கிறாரா? எந்த விதத்தில் அவர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்? தற்போது வெளியிட முடியாத அளவிற்கு புத்தகத்தில் என்ன கூறியிருக்கிறார் என்றெல்லாம் சலசலப்பு எழுந்தன.  உடனே பி. டி. ஆர். அதற்கு விளக்கம் அளித்து இருக்கிறார்.  தற்செயலாக என் வார்த்தைகளின் வரிசையால் சிலருக்கு ஏற்பட்ட கவலைக்கு மன்னிக்க வேண்டும்.  புத்தகத்தின் உள்ளடக்கங்கள் மிகவும் நேர்மையாக இருக்கும் என்றுதான் நான் சொன்னேன் . இனி நான் அமைச்சராக இருக்கும் வரைக்கும் அதை வெளியிட முடியாது.  அதனால் பின்னர் வெளியிடுவேன் என்று சொல்லி இருந்தேன்.  ஒவ்வொரு அமைச்சரும் ஒரு நாள் அலுவலகத்தில் இருந்து ஓய்வு பெற வேண்டும் தானே என்று கூறி இருக்கிறார்.