அது செத்துப் போன பாம்பு.. யாரும் அத பத்தி நினைக்க மாட்டாங்க.. டிஆர்பாலுவுக்கு பதிலடி

 
ka

செத்துப் போன பாம்பை யாரும் நினைப்பார்களா என்று கேட்கிறார்   காடேஸ்வர சுப்ரமணியம்.  சேது சமுத்திரத் திட்ட விவகாரத்தில் 
கையை வெட்டுவேன் என்று சொன்ன  டி. ஆர். பாலுவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக காடேஸ்வர சுப்ரமணியம் இவ்வாறு பேசியிருக்கிறார்.

 மதுரையில் நடந்த திறந்த வெளி மாநாட்டில் திமுக பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி. ஆர். பாலு பங்கேற்று பேசினார்.   அப்போது,   ராமர் பாலம் என்பது ஒரு கட்டுக்கதை.   சேது சமுத்திர சட்டத்தை தடுத்து நிறுத்துவதற்காகவே இது போன்ற கட்டுக் கதைகளை சொல்லி வருகின்றார்கள் . இந்தத் திட்டத்தினை தடுத்து நிறுத்தியவர்கள் எல்லோரும் பாவிகள் என்றார்.

tr

 தொடர்ந்து பேசிய டி. ஆர். பாலு,    யாராவது உங்களை சீண்டினால் உங்களால் திருப்பி அடிக்க முடியாது . ஆனால் என்னால் முடியும்.  ஏனென்றால் உங்களின் பலம் கிடையாது. எனக்கு பலம் உண்டு. அதனால் நான் திருப்பி அடிப்பேன்.  என் கட்சித் தலைவரை சீண்டினாலோ எவனாவது ஒருவன் ஐயா வீரமணியின் மீது கை வைத்தாலோ அவன் கையை வெட்டுவேன்.  இதுதான் என் தர்மம் .  அவன் கையை வெட்டுவது தான் என் நியாயம்.  இது நியாயம் இல்லை என்று நீங்கள் சொல்லலாம். அதை நீதிமன்றத்தில் போய் சொல்லுங்கள் . ஆனால் அதற்கு முன்பே அவன் கையை வெட்டி விடுவேன்.  நீங்கள் எல்லாம் முறைப்பதை பார்த்தால் நாளைக்கே போட்டுக் கொடுத்து விடுவீர்கள் போலிருக்கிறது.  அவரை நாவடக்கத்துடன் பேச சொல்லுங்கள் என்று சொல்வீர்கள்.  சொன்னால் சொல்லிக் கொள்ளுங்கள் என்று பேசி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறார்.

இதற்கு  திருப்பூரில் நடந்த ஆட்டோ தொழிலாளர் முன்னணியின் மாநில பொதுக்குழுவை துவக்கி வைத்து இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் பேசியபோது,   கோவை, ஈரோடு மாவட்டங்களில் வங்கதேசத்தை சேர்ந்த இஸ்லாமியர் சட்டவிரோதமாகவும் போலி ஆவணங்களை பயன்படுத்தியும் தங்கி இருக்கிறார்கள்.   கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ்நாட்டில் கலவரத்தை உருவாக்க வேண்டும் என திட்டமிட்டு சரி செய்து  வருகின்றார்கள்.

 முறைகேடாக தங்கி இருக்கும் நபர்களை கண்டறிந்து அவர்களை வெளியேற்ற வேண்டும் அரசு.   போலீஸ் அதிகாரி தலைமையில் குழு அமைத்து சட்டவிரோதமாக தங்கி இருக்கும் நபர்களை கண்டறிய வேண்டும்.   பழனி கோவிலுக்கு பழனி கோவில் கும்பாபிஷேகம் ஆகம விதிகளுக்கு மாறாக நடந்திருக்கிறது.  இதனால் அரசுக்கு கேடு விளையும் என்று ஆன்மீகப் பெரியோர் சொல்கின்றார்கள்.   தமிழக அரசுக்கு கெட்ட காலம் வந்து விட்டது என்றே நினைக்கிறேன் என்ற சொன்னவர்,

 டி. ஆர். பாலு எம்பி சுயலாப நோக்கத்துடன் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவோம் என்கிறார். வீரமணி மீது கை வைத்தால் கையை வெட்டுவேன் என்று சொல்கிறார்.  செத்துப் போன பாம்பை யாரும்  நினைப்பார் இல்லை . அவரது அமைப்பும் காணாமல் போய்விட்டது . மக்களும் அவரை கண்டு கொள்வதில்லை என்றார்.