திமுக ஸ்லீப்பர் செல்கள்தான் நம்மை சேதப்படுத்துகின்றன - உட்கட்சி மோதல் குறித்து காயத்ரி விளக்கம்

 
க்

தமிழக பாஜகவில் தற்போது ஏற்பட்டிருக்கும் பிரச்சனைக்கு திமுக தான் காரணம் என்று குற்றம் சாட்டியிருக்கிறார் காயத்ரி ரகுராம்.  திமுக ஸ்லீப்பர் செல்கள்தான் நம்மை சேதப்படுத்துகின்றன என்று பாஜகவின் உட்கட்சி மோதல் குறித்து காயத்ரி ரகுராம் கூறி இருக்கிறார்.

தமிழக பாஜகவின் ஓபிசி பிரிவு மாநில பொதுச்செயலாளர் சூர்யா சிவா, தமிழக பாஜகவின் சிறுபான்மையினர் அணித் தலைவராக இருக்கும் டெய்சி சரணை ஆபாசமாக பேசும், கொலை மிரட்டல் விடுத்து பேசும் ஆடியோ வைரலாகி வருகிறது.  இதனால் பாஜகவுக்குள் பெரும் சலசலப்பு எழுந்திருக்கிறது.  

 இது குறித்து காயத்ரி ரகுராம் கண்டனம் தெரிவித்திருந்ததால் அவரின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் பொறுப்பு பறிக்கப்பட்டிருக்கிறது.

டெ

பெண்களை குறிவைத்து தவறாக பேசினால் நாக்கு வெட்டப்படும் என உறுதியளித்துள்ளார். இப்படிப்பட்ட சமயங்களில் சொந்த கட்சிப் பெண்களை ஏன் தாக்க வேண்டும்? இந்த ஹைனாக்களுக்கு அழகு பார்க்க கட்சியில் மாநில பதவி கொடுத்தது மிகப்பெரிய தவறு என்று சூர்யாசிவாவின் ஆபாச பேச்சுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார் காயத்ரி ரகுராம்.

அவர் மேலும்,  பொது இடத்தில் அழுக்குத் துணிகளை துவைக்கிறோம் என்று சொல்கிறார்கள் செ & கோ ட்ரோல்ஸ். ஆனால் சில மற்ற கட்சிகளில் இருந்து புதிதாக இணைந்தவர்களும், சில ஜல்ட்ரா ஆதரவாளர்களும் ஆபத்தானவர்கள் என்பதை உணரவில்லை. எல்லாவற்றையும் விட்டுவிட்டு நம்மை ட்ரோல் செய்கிறார்கள் வார் ரூம், செல்வா & கோ. 

புகார் எழுந்தபோது என்ன நடந்தது? நான் கோபமாக இருக்கிறேன். களப்பணி இல்லாமல் சிலர் ஜல்ட்ரா மட்டும் செய்தால் இதுதான் நடக்கும். திருச்சி சூர்யா & கோ அல்லது செல்வா & கோ மீண்டும் எங்களை ட்ரோல் செய்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். சைக்கோ மூளையால் மட்டுமே முடியும். என் இரத்தம் கொதிக்கிறது. 

கட்சியை குறை சொல்ல வேண்டாம் என அனைவருக்கும் தாழ்மையான வேண்டுகோள். திமுக ஸ்லீப்பர் செல்கள்தான் நம்மை சேதப்படுத்துகின்றன. அவர்கள் தங்கள் திராவிட மாடலை இங்கே காட்டுகிறார்கள். இதை நான் கண்டிக்கிறேன்.. இந்த நபர்களை போலீசார் கைது செய்ய வேண்டும். மற்றும் கட்சி அவரை உடனடியாக நீக்க வேண்டும்.  குரல் அச்சுறுத்தலைக் கேட்டு இதயம் உடைந்தது. டெய்சிக்கு வலிமை. என் ஆறுதல் மற்றும் ஆதரவு என்று பதிவிட்டிருந்தார்.

பாஜகவில் ஏற்பட்டுள்ள இந்த சலசலப்புகளுக்கும் சர்ச்சைகளுக்கும் திமுகவின் ஸ்லீப்பர் செல்கள்தான் காரணம் என்று காயத்ரி ரகுராம் குற்றம் சாட்டியிருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.