டி.ராஜேந்தருக்கு இப்படி ஒரு நிலைமையா? என்ன செய்யப்போகிறார்?

 
ட்ர்

 டி.  ராஜேந்தரின் லட்சிய திமுக கட்சி செயல்படாத கட்சி என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  அதே நேரம் தேர்தல் ஆணையத்தின் முடிவில் ஏதேனும் மாற்றுக் கருத்து இருந்தால் அணுகலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.   இதனால் டி.   ராஜேந்தர் தேர்தல் ஆணையத்தை அணுகுவாரா? அப்படி அணுகினால் அவருக்கு எந்த மாதிரியான நிவாரணம் தேர்தல் ஆணையம் வழங்கும் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

ட்ர்ர்

பிரபல திரைப்பட இயக்குநர் டி.ராஜேந்தர் திமுகவில் பிரச்சார பீரங்கியாக இருந்தார்.  அவர்  1991 ஆம் ஆண்டில் திமுகவிலிருந்து விலகி தாயக மறுமலர்ச்சி கழகம் என்கிற அரசியலமைப்பை தொடங்கினார்.   பின்னர் அந்த கட்சியை கலைத்து விட்டு மீண்டும் திமுகவில் இணைந்தார்.   1996 இல் நடந்த சட்டமன்ற தேர்தலில்  திமுக சார்பில் பூங்கா நகர் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.   அதன் பின்னர் சில பிரச்சனைகளால் மீண்டும் திமுகவில் இருந்து வெளியேறினார்.   2004 ஆம் ஆண்டில் லட்சிய திமுக என்கிற அமைப்பை தொடங்கினார்.    2013ஆம் ஆண்டு கருணாநிதி அழைப்பினை ஏற்று மீண்டும் திமுக இணைந்தார்.  இதன் பின்னர் சில ஆண்டுகள் அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த டி.  ராஜேந்தர் 2021 நடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை . யாருக்கும் ஆதரவு இல்லை என்றும் தெரிவித்தார்.

இந்த நிலையில் டி. ராஜேந்தரின் லட்சிய திமுக செயல்படாத கட்சி என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.   ஒரு கட்சி பதிவு செய்யப்பட்டு ஐந்து ஆண்டுகளில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நடத்துகின்ற தேர்தலில் அந்த கட்சி நிற்கவில்லை என்றால் அது கட்சி செயல்படாத கட்சி என்று அறிவிக்கப்படும் . ஆறு ஆண்டுகள் தொடர்ச்சியாக அந்த ஒரு கட்சி தேர்தலில் நிற்கவில்லை என்றால் அந்த கட்சி பதிவு செய்யப்பட்ட பட்டியலில் இருந்து நீக்கப்படும்.

எ

  இந்திய தேர்தல் ஆணையம்  வெளியிட்டு இருக்கும் பட்டியலில் ஐந்து ஆண்டுகளில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நடத்தும் தேர்தலில் நிற்காத கட்சிகளின் பட்டியலில் டி. ராஜேந்தரின் லட்சிய தேமுதிக இடம் பெற்றுள்ளது.   இதனால் செயல்படாத கட்சி என்று லட்சிய திமுகவை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதே நேரம் தேர்தல் ஆணையத்தின் முடிவில் ஏதேனும் மாற்றுக் கருத்து இருந்தால் அணுகலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.   இதனால் டி. ராஜேந்தர் தேர்தல் ஆணையத்தை அணுகுவாரா? அப்படி அவர் அணுகினால் அவருக்கு எந்த மாதிரியான நிவாரணம் தேர்தல் ஆணையம் வழங்கும் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.