அந்த கறுப்பு ஆடு இதுதானா? ஓபிஎஸ் அதிர்ச்சி

 
bl

அதிமுகவில் தனது அதிகாரம் போய்விடக் கூடாது என்பதற்காக அதற்கான முயற்சிகளில் படு தீவிரமாக இறங்கி இருக்கிறார் ஓபிஎஸ்.   ஆனாலும் எப்படியும் ஓபிஎஸ்ஐ கட்டம் கட்டி கட்சியிலிருந்து வெளியேற்றியே  தீரணும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார் எடப்பாடி.   இதற்கிடையில் இருவரின் நடவடிக்கைகள் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தி வருகின்றன.

  இரு தரப்புமே  இந்த விவகாரத்தில்  நீதிமன்றத்தினை நாடி இருக்கிறது.   தேர்தலை அணைத்தையும் நாடி இருக்கிறார்கள்.   சட்ட வல்லுனர்களுடன் இரு தரப்பினருமே தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.   பல்வேறு கட்சியின் சீனியர்களிடமும் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.   இதனால் இரு தரப்புமே எதிர் அணியில் என்ன நடக்கிறது என்கிற பதைபதைப்பில்  இருக்கிறது.

eeoo

 இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் ரகசிய நடவடிக்கைகள் முன் கூட்டியே எதிர் முகாமுக்கு  தெரிந்து விடுகிறது என்ற சந்தேகம் வந்திருக்கிறது ஓபிஎஸ் டீமுக்கு.   ஓபிஎஸ் போகும் இடம் பற்றி எல்லாம் எடப்பாடி தரப்புக்கு முன்கூட்டியே தகவல் போய்விடுகிறதாம்.  இதனால் நமது அணியில் இருக்கும் அந்த கறுப்பு ஆடு யார் என்ற சலசலப்பு ஓபிஎஸ் டீமில் எழுந்திருக்கிறது.

 ஆனால் பலரும் அந்த கறுப்பு ஆடு இதுதான் என்பது மாதிரியான ஒரு சந்தேகத்தை எழுப்பி இருக்கிறார்கள்.  இதனால் ஓபிஎஸ் அதிர்ந்து போயிருக்கிறார்.  எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சித் தலைவர் ஆனதும் அரசு சார்பில் அவருக்கு ஒரு காரும் இரண்டு டிரைவர்களும் கொடுத்திருக்கிறார்கள்.  ஆனால் எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓபிஎஸ்க்கு அரசு சம்பளம் மட்டுமே.  அவருக்கு காரும் தனியாக டிரைவரும் கிடையாது .  

இதனால் தனியாக ஒரு டிரைவரை போட்டு அவருக்கு சம்பளம் தர வேண்டுமா என்று யோசித்த ஓபிஎஸ் ,   எடப்பாடிக்கு கொடுத்த இரண்டு டிரைவர்களில் ஒருவரை தனக்கு டிரைவராக வைத்துக் கொண்டிருக்கிறார் .  இந்த நேரத்தில் இருதரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டு விட்டதால் எடப்பாடிக்கு கொடுக்கப்பட்டிருந்த டிரைவரைத் தான் ஓபிஎஸ் தனக்கு டிரைவராக வைத்து இருப்பதால் அவர் மூலமாக கூட ரகசியங்கள் திட்டங்கள் நடவடிக்கைகள் குறித்து எடப்பாடிக்கு போய் விடுகிறதா என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது ஓபிஎஸ் அனியினருக்கு.