திமுகவுக்கு இது புதுசா? அப்போ இதெல்லாம் என்னப்பா? போட்டோ ஆதாரங்களுடன் பரவுது

 
d

தர்மபுரி மாவட்டத்தில் பாப்பிரெட்டிப்பட்டி தாலுக்காவில் உள்ள ஆலாபுரம் ஏரி சீரமைப்பு பணி துவக்க விழா நேற்று நடந்தது.  மத்திய மற்றும் மாநில அரசின் சார்பில் இந்த நிகழ்வு நடந்தது.   இதை முன்னிட்டு நீர்வள ஆதார அலுவலர்கள் பூமி பூஜைக்கு ஏற்பாடு செய்தனர்.   இந்த விழாவில் பங்கேற்ற தருமபுரி திமுக எம்பி செந்தில்குமார் பூமி பூஜைக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

r

 ஹிந்து மத முறைப்படி மட்டும் ஏன் பூஜை  செய்கிறீர்கள்?  அரசு விதிமுறைப்படி பூஜைகள் செய்யக்கூடாது.  அப்படி செய்வது என்றால் முஸ்லிம்களை கூப்பிடுங்கள், பாதிரியாரை கூப்பிடுங்கள், திராவிடர் கழகத்தினரை கூப்பிடுங்க. ள் எல்லாரையும் கூப்பிட்டு பூஜை செய்யுங்கள்.  இல்லை என்றால் நடத்தக்கூடாது இது திராவிட மாடல் அரசு .  ஆர் எஸ் எஸ் கிடையாது என்று அதிகாரிகளை எச்சரித்து பூமி பூஜையை பாதியில் நிறுத்தினார்.  இது குறித்த வீடியோவை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

g

 இதை அடுத்து செந்தில்குமார் எம்பியின் இந்த செயலுக்கு காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் உட்பட பல்வேறு தரப்பினரும் கண்டனம்  தெரிவித்து வருகின்றனர். திமுகவில் மறைந்த தலைவர் கருணாநிதி நல்ல நேரம் பார்த்து தான் எதையும் செய்வார் என்று பல்வேறு தரப்பினரும் சொல்லி வருகின்றனர். தற்போதைய திமுக தலைவர் ஸ்டாலினும் கூட நல்ல நேரம் பார்த்துதான் எதையும் செய்கிறார் என்கிற விமர்சனமும் இருக்கிறது.

 திமுகவின் பதவி ஏற்பு விழா உட்பட பல  விழாக்கள் அரசு விழாக்கள் தான்.  அந்த விழாக்கள் எல்லாம் நல்ல நேரம் பார்த்து தான் செய்யப்படுகின்றது என்பது  செந்தில்குமார் எம்பிக்கு தெரியாதா என்ற நெத்தியடியாக பதில் அளித்து இருந்தார் கார்த்திக் சுதந்திரம்.

trp

இந்த நிலையில்,   அரசு விழாக்களில் திமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள்  நடத்திய பூமி பூஜை குறித்த படங்களும் அது குறித்த தகவல்களும் வைரலாகி வருகின்றன. நாளிதழும் செய்தி வெளியிட்டிருக்கிறது.

 தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் கடந்த ஜூன் 27ஆம் தேதி நடந்த வடக்கு மாவட்ட திமுக அலுவலக கட்டட அடிக்கல்  விழாவில் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பூமி பூஜையில் பங்கேற்று இந்து மத பூஜைப்படி  செய்து கொடுக்கப்பட்ட செங்கல்லை அடிக்கல் நாட்டினார்.   அமைச்சர் ஆர். காந்தி கிருஷ்ணகிரி நகராட்சி சின்ன ஏரி மேம்படுத்தும் பணி நகர்ப்புற மேம்பாட்டு  திட்ட பணிகளுக்கு பூமி பூஜை செய்து தொடங்கி வைத்துள்ளார்.  

u

 புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் அமைச்சர் ரகுபதி பூமி பூஜை நடத்தி உள்ளார்.   திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவரும்,  திமுக எம்எல்ஏவுமான டிஆர்பி ராஜா மன்னார்குடி மேம்பாலம் அருகில் தமிழக அரசின் ஆவின் நிறுவனத்திற்கு சொந்தமாக பால் குளிரூட்டும் நிலையம் அமைக்க பூமி பூஜை நடத்திய போது அதில் பங்கேற்றார்.விழுப்புரம் மாவட்டத்தில் மேல்மலையனூர் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்கம்  கட்டிடம் கட்டுவதற்காக நடந்த பூமி பூஜையை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்துள்ளார். 

se

 இப்படி திமுகவின் தலைவர் முதல் அமைச்சர்கள் , எம்எல்ஏக்கள் என அனைவரும் பூமி பூஜையில் பங்கேற்றிருக்கும் போது நல்ல நேரம் பார்த்து செயல்படும் போது செந்தில்குமார்  மட்டும் எதற்காக இப்படி எகிறி குதிக்கிறார்.  திமுகவுக்கு இது புதிது என்பது போல ஏன் நடந்து கொள்கிறார் என்ற கேள்வியை பலரும் எழுப்பி வருகின்றனர்.