இருக்குற பிரச்சினை போதாதா? நான் அப்படி சொல்லவே இல்லை? பதறிய உதயநிதி

 
d

இருக்குற பிரச்சினை போதாதா?  நான் அப்படி சொல்லவே இல்லை? பதறிய உதயநிதி, நீங்களே என்னை புரிந்து கொள்ளவில்லை என்று ஆர். எஸ். பாரதியைப் பார்த்து ஆதங்கப்பட்டார்.

 சென்னையில்  ஆதம்பாக்கத்தில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் கருணாநிதி பிறந்தநாள் விழா,  திமுக ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்,  கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா நடந்தது.    இந்த விழாவில் திமுக இளைஞர் அணி செயலாளரும்,  சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பேசும்போது,    ’’கழகத்தின் அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி பேசும் போது நான் மிகவும் ராசிக்காரன் என்று சொன்னார் . எனக்கு அதில் நம்பிக்கை கிடையாது.   கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போது நான் சென்று பிரச்சாரம் செய்ததால் தான் வெற்றி பெற்றது போல் பேசினார்.  அது கலைஞருக்கு கிடைத்த வெற்றி.  தலைவர்  ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி .  கழகத்தினரின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி’’என்றார்.

u

தொடர்ந்து பேசிய அவர்,   சின்னவர் விவகாரம் குறித்து விளக்கம் அளித்தார்.    ’’அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி பேசும்போது என்னை ’சின்னவர்’ என்று அழைக்க சொன்னதாக  கூறினார்.   இருக்கிற பிரச்சினை போதாதா?  நான் அப்படி சொல்லவே இல்லை? நிறைய கூட்டங்களில் என்னை பற்றி பேசும்போது,  மூன்றாம் கலைஞர்,  இளம் கலைஞர்,  சின்ன கலைஞர் என்று சொல்கிறார்கள்.   என் மீது உள்ள அன்பின் காரணமாக அவர்கள் இப்படி சொல்கிறார்கள்.  

என்னை அப்படி பெருமைப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு  கலைஞரை சிறுமைப்படுத்துகிறார்கள்.   கலைஞருக்கு நிகர் கலைஞர் மட்டும் தான்.  ஒரே கலைஞர் தான்.  அதனால்தான் கலைஞருடன் ஒப்பிட்டு பார்க்கும்போது நான் ரொம்ப சின்னவன்.  அதனால்தான் என்னை சின்னவர் என்று கூப்பிடுங்கள் என்று சொன்னேனே தவிர நானாக போய் எல்லோரையும்,   என்னை சின்னவர் என்று கூப்பிடுங்கள் சின்னவர் என்று கூப்பிடுங்கள் என்று சொன்னது போல் பேசிக்கிட்டு இருக்கிறார்கள்.  நீங்களே என்னை புரிந்து கொள்ளவில்லை’’ என்று ஆர். எஸ். பாரதியைப் பார்த்து ஆதங்கப்பட்டார்.