உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எடப்பாடிக்கு சாதகமாக இருக்கிறதா?

 
eeeee

அதிமுக பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்கக் கோரி ஓ. பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற  இந்த விவகாரம் தொடர்பாக மீண்டும் சென்னை உயர் நீதிமன்றமே விசாரித்து தீர்வு காண வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது.   இது தங்கள் தரப்புக்கு கிடைத்த சாதகமான தீர்ப்பு என்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர்  சொல்லி வரும் நிலையில்,  உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு குறித்து விளக்கம் அளித்திருக்கிறார் அதிமுகவின்  முன்னாள் செய்தி தொடர்பாளரும் ஓபிஎஸ் ஆதரவாளருமான புகழேந்தி.

su

 உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில்,   11ஆம் தேதி அதிமுக என்கிற பெயரில் எடப்பாடி பழனிச்சாமி கூட்டிய பொதுக்குழுவை கூட்டுவதற்கு உத்தரவிடவில்லை.  சட்டப்படி பொதுக்குழுவை கூட்டலாம் என்று சொல்லி இருந்தோம். தவிர, நாங்கள் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்று உத்தரவிட்டு அவர்கள் கூட்டவில்லை.  தவறுதலாக ஒரு புரிதல் ஏற்பட்டிருக்கிறது என்று கூறப்பட்டிருக்கிறது.

 மேலும்,   முன்னர் கொடுக்கப்பட்ட எந்த தீர்ப்புகளையும் எடுத்துக் கொள்ளாமல் மிகத் தெளிவாக விசாரணை செய்து தீர்ப்பினை வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்திற்கு  உத்தரவிட்டிருக்கிறது உச்ச நீதிமன்றம் என்கிறார் புகழேந்தி.

ga

 வைரமுத்து கொடுத்த மனுவை ஏற்றுக்கொண்டு தான் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது  என்று சொல்லும் புகழேந்தி,  இந்த தீர்ப்பு குறித்து திரித்து பேசப்படுகிறது.  இந்த தீர்ப்பு குறித்து திரித்து பேசப்படுகிறது.   உண்மையை மறைத்து சித்தரித்து பேசுவது எடப்பாடி தரப்புக்கு ஒரு வழக்கமாகிவிட்டது . அதனால் தான் அவர்களுக்கு சாதகமாக இருக்கிறது என்று சொல்லுகிறார்கள்.  அது தவறான செயல் . 

பொதுக்குழுவை கூட்டச் சொல்லவில்லை என்பதை உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தி இருக்கிறது.  அதனால் இந்த வழக்கு விசாரணையில் உயர் நீதிமன்றம் ஒரு நல்ல தீர்ப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கிறேன் என்கிறார்.