இது மாலிக் கபூர் ஆட்சியா? திமுக ஆட்சியா? எச்.ராஜாவுக்கு வந்த சந்தேகம்

 
h

இது மாலிக் கபூர் ஆட்சியா? இல்லை திமுக ஆட்சியா? என்ற சந்தேகம் இருக்கிறது என்கிறார் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா.  அவர் மேலும்,  திருச்செந்துறையில் இந்துக்களை வெளியேற்றி அவர்களின் சொத்துக்களை பறிக்க சதி நடக்கிறது என்று குற்றம் சாட்டினார்.

 பாஜக மூத்த தலைவர் எச். ராஜா திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய போது,   தமிழகத்தில் திமுக ஆட்சி நடக்கிறதா? இல்லை மாலிக் கபூர் ஆட்சி நடக்கிறதா? என்கிற சந்தேகம் இருக்கிறது என்றார். 

r

 தொடர்ந்து அது குறித்து பேசிய எச். ராஜா,   பெரும்பான்மையாக வசிக்கும் இந்த ஊரில் இருக்கும் சந்திரசேகர சுவாமி கோவில் ஒன்பதாம் நூற்றாண்டில் ஆதித்த சோழனால் சுண்ணாம்பு கலவையால் கட்டப்பட்டது. 10ம் ஆம் நூற்றாண்டில் ராணி குந்தவை முயற்சியால் கற்கோவிலாக கட்டப்பட்டது.  

வக்ப் சார்பாக ரப்யுல்லா  என்பவர் அளித்திருக்கும் கடிதத்தை போல மிகப் பெரிய பொய் வேறு எதுவும் இருக்க முடியாது.  அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றார்.

 அறநிலையத்துறை அமைச்சராக இருக்கும் சேகர் பாபு இந்து கோவில்களுக்கு 33 ஆயிரம் கட்டடங்கள் 22,000 க்கு மேற்பட்ட மனைகள் 28 கோடி சதுர அடி நிலம் 11.73 ஏக்கர் நிலங்கள் உள்ளன என்று அறிவித்திருக்கிறார்.   ஆனால் 15 நாட்களுக்குள் ஒவ்வொரு சார்பதிவாளர் அலுவலக எல்லைக்குள்ளும் இருக்கும் கோவில் நிலங்கள் பற்றிய விவரங்களை சர்வே எண்ணுடன் அறிவிப்பு வைக்க வேண்டும்.  அதில் கோவில் நிலங்கள் வேறு பெயரில் பத்திரம் பதிவு செய்யப்படக் கூடாது என்றும் குறிப்பிட்ட வேண்டும்.   இல்லை என்றால் திண்டுக்கல் சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடக்கும் என்று எச்சரித்தார் ,

h

அவர் மேலும்,   ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி ஊழல் இந்து விரோத அரசாக உள்ளது.   ஈவேரா திறப்பதற்கு திராவிடர் கழகம் திமுக என்பதெல்லாம் மோசடி கும்பல் இந்து கோவில் சொத்துக்கள் கோவில் நிர்வாகம் அறநிலையத்துறை இடம் இருந்தாலும் கோவில் நிலங்கள் அரசு நிலங்கள் அல்ல புறம்போக்கு அல்ல.    புதிய ஜனாதிபதி பொறுப்பேற்ற பின்னர் கோவில் நிலத்தை பத்திரம் போட்டால் உடனடி சஸ்பெண்ட்,  மூன்று வருட சிறை தண்டனை என்று உத்தரவிட்டார் என்பது போன்ற சட்டங்கள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன.   யார் சொத்தாக இருந்தாலும் களவாட முடியும் என்பது இந்த அரசு நிரூபித்திருக்கிறது என்றார்.