இதை தனக்கு சாதகமாக்கி களமிறங்குகிறாரா சசிகலா?

 
ல்ச்

அதிமுகவில் எழுந்திருக்கும் அதிருப்தி அலைகளை சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறாராம் எடப்பாடி பழனிச்சாமி.  இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சசிகலா அதிரடியாக கட்சிக்குள் என்ட்ரி கொடுக்க இருக்கிறார் என்று சொல்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

அதிமுகவுக்கு இரண்டு மாநிலங்களவை சீட் கிடைத்ததில் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளருக்கு ஒன்று,  எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளருக்கு ஒன்று என இரண்டு பேரும் தங்கள் ஆதரவாளர்களுக்கு ஆளுக்கு ஒரு சீட்டை கொடுத்திருக்கிறார்கள்.  கிட்டத்தட்ட 60க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு கொடுத்திருக்கிறார்கள்.  இவர்கள் அத்தனை பேரும் ஓபிஎஸ் , எடப்பாடி இருவரையும் சந்தித்து தங்களுக்கு  அந்த சீட் வாங்கிவிட முட்டி மோதிக் கொண்டிருந்திருக்கிறார்கள் . 

ச்ல்

கடைசியில் தனது தீவிர ஆதரவாளர் சி.வி. சண்முகத்திற்கு ஒரு சீட் கொடுத்துவிட்டார் எடப்பாடி பழனிச்சாமி .   தர்மயுத்தம் தொடங்கியது முதல் தற்போது வரைக்கும் தனக்கு தீவிர விசுவாசியாக இருக்கும் தர்மருக்கு ஒரு சீட்டு வழங்கிவிட்டார் ஓ. பன்னீர்செல்வம்.  இதனால் சீட் கிடைக்காதவர்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல்.

 இதில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அவர் மீது காட்டும் அதிருப்தியை விட எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் சீட் கிடைக்காத ஆத்திரத்தில் அவர் மீது காட்டும் அதிருப்திதான் அதிகம் என்கிறது கட்சி வட்டாரம்.

 முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மாநிலங்களவை எம்பி சீட்க்காக ரொம்பவே மெனக்கெட்டு இருந்தாலும்,  அவருக்கு கொடுக்க முடியாத காரணத்தால் அவருக்கு வேறு ஒரு முக்கிய பதவியை தர இருப்பதாக சொல்லி அவரை சமாதானப்படுத்தி இருக்கிறார் எடப்பாடி.   ஆனால் செம்மலை, கோகுல இந்திரா, வளர்மதி , இன்பதுரை உள்ளிட்டவர்களை எடப்பாடியால் சமாதானப்படுத்த முடியவில்லை போலிருக்கிறது .  அவர்கள் எடப்பாடி பழனிச்சாமி மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்களாம். அதிலும் செம்மலை தான் எடப்பாடி பழனிச்சாமி   சேலத்தில் இருந்தும் கூட எடப்பாடி பழனிச்சாமியை சந்திப்பதை தவிர்த்து வருகிறார் என்கிறார்கள்.

க்

 அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அதிருப்தி  அலைகள் அதிகரித்திருக்கிறது.   இந்த நிலை சசிகலாவுக்கு சாதகமாக அமைந்து இருக்கிறது.  அதிமுகவை எனது தலைமையின் கீழ் கொண்டு வருவது நூறு சதவீதம் உறுதி என்று அடித்துக் கூறி வரும் சசிகலா இந்த சந்தர்ப்பத்தை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அதற்கு அவர்களை தன் பக்கம் இழுத்து அதிமுகவிற்குள் அதிரடியாக என்ட்ரி கொடுப்பார் என்று நம்பிக்கையுடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். அதேநேரம் அதிருப்தியாளர்களை எப்படி திருப்திப்படுத்துவது என்ன சொல்லி சமாளிப்பது என்று திணறி கொண்டிருக்கிறாராம் எடப்பாடி.