பாஜகவில் இணைகிறாரா சசிகலா? காய் நகர்த்தும் சீனியர்கள்

 
sa

சசிகலா மீண்டும் அதிமுகவிற்குள் வந்து தனது அதிகார பலத்தை காட்டலாம் என்று நினைத்தால் அதற்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டுக் கொண்டே இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.  

 எடப்பாடியும் அவரது ஆதரவாளர்களும் சசிகலாவை அதிமுகவில் கொண்டு வரக்கூடாது என்று உறுதியாக இருப்பதால், அதிமுகவில் சில நிர்வாகிகளிடம் சசிகலா தொடர்ந்து பேசிய ஆதரவு திரட்டி வருகிறார்.   தற்போதிருக்கும் சூழலில் அதிமுகவிற்குள் நுழைவது  என்பது அத்தனை சுலபமானது அல்ல என்பதை புரிந்துகொண்ட சசிகலா ,  பாஜக தலைமை சொன்னால் அதிமுக தலைமை கேட்கும் என்று   பாஜகவின் தலைமையை சந்திக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தார்.

sasi

 அப்படி ஒரு முயற்சியாக நடிகையும் பாஜக பிரமுகருமான விஜயசாந்தி மூலம் அந்த முயற்சி எடுத்து வந்திருக்கிறார்.   விஜயசாந்திக்கும் சசிகலாவுக்கும் நல்ல பழக்கம் இருந்து வரும் நிலையில் ரகசியமாக இருவரும் சந்தித்து பேசி இருக்கிறார்கள் என்று தகவல் வெளியானது.  சசிகலாவின் கோரிக்கையின்படி டெல்லி தலைமையிடம் குறிப்பாக அமித்ஷாவிடம் பேசியிருக்கிறார் விஜயசாந்தி.  ஆனால் சசிகலாவை சந்திக்க அனுமதி கொடுக்கவில்லை .

ன

இந்த தகவலை சசிகலாவுக்கு தெரியப்படுத்த அவர் ரொம்பவே அப்செட்டில் இருந்திருக்கிறார்.   ஆனால் தற்போது மீண்டும் சசிகலாவை ரகசியமாக சந்தித்திருக்கிறார் விஜயசாந்தி.  இந்த சந்திப்பில் நம்பிக்கை கொடுக்கும் விதமாக தகவல் சொல்லியிருக்கிறார் விஜயசாந்தி. 

sl

 இதையடுத்து சசிகலா  டெல்லி செல்வதற்கான ஏற்பாடுகள் தயாராகி வருகின்றன என்று தகவல் பரவியது.  அதாவது அதிமுகவிற்குள் சசிகலா வருவதற்கு பாஜக தலைமை உதவி செய்யப் போவதாக தகவல் வெளியாகி வந்தன.  ஆனால் தற்போது வந்துகொண்டிருக்கும் தகவல்கள் வேறு மாதிரியாக இருக்கிறது.   சசிகலாவை  பாஜகவிற்கு செல்லவிருக்கிறார் என்று தகவல் வருகிறது.  

அதை உறுதிப்படுத்தும் விதமாக தமிழக சட்டமன்ற பாஜக தலைவரும் முன்னாள் அமைச்சருமான நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது, சசிகலா குறித்த கேள்விக்கு,   சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக்கொண்டால் அக்கட்சி வளரும் . அப்படி அதிமுகவில் அவரை சேர்த்துக் கொள்ளவில்லை என்றால் பாஜகவில் சேர்ந்தால் சசிகலாவை வரவேற்போம்.   அப்படி சசிகலா பாஜகவில் சேர்ந்தால் பாஜகவிற்கு உறுதுணையாக இருக்கும் .  இதற்கான முயற்சிகளை நாங்கள் எடுத்து வருகிறோம் என்று தெரிவித்திருக்கிறார்.