ஓபிஎஸ் வசமானதா ராமநாதபுரம் மாவட்டம்?

 
oo

ஓபிஎஸ் வசமானது இராமநாதபுரம் மாவட்டம் என்று சொல்லும்  அளவிற்கு அவரது ஆதரவாளர்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்ப்பை தெரிவித்து வருகின்றர்.   எடப்பாடி உருவ பொம்மையினையும் எரித்து  கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

 திடீரென்று ஒற்றைத் தலைமை விவகாரத்தை எடப்பாடி பழனிச்சாமி கையில் எடுத்ததோடு மட்டுமல்லாமல் , அந்த ஒற்றை தலைமையை வரக்கூடாது என்று ஓபிஎஸ் தடுத்ததால் அவரை பொதுக்குழுவில் உறுப்பினர்களை கண்டபடி திட்ட வைத்து,  ஓபிஎஸ்-க்கு எதிராக மேடையில் பலரும் பலரையும் பேச வைத்து,  ஓபிஎஸ் மீது தண்ணீர் பாட்டிலை வீச வைத்ததால் அவரை தாக்கவும் திட்டமிடப்பட்டிருந்ததால் எடப்பாடி பழனிச்சாமி மீது கடும் ஆத்திரத்தில் இருக்கிறோம் என்கிறார்கள் ராமநாதபுரம் மாவட்டத்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.

bb

 இதனால் எடப்பாடிக்கு தொடர்ந்து தங்களை எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் .   ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலாடி பேருந்து நிலையத்தில் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் சத்தியமூர்த்தி தலைமையில் எடப்பாடி உருவ பொம்மை தீயிட்டு கொளுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கடலாடி ஒன்றிய ஜெ. பேரவை செயலாளர் நீதி வேந்தன் உருவானந்தல் ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜன் ஆகிய ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.  

 கமுதியிலும் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னதாகவே எடப்பாடி பழனிச்சாமியின் புகைப்படத்தை கிழித்தெறிந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

 முதுகுளத்தூர் பகுதியிலும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் எடப்பாடிக்கு எதிராக தொடர்ந்து கண்டனம் தெரிவித்து  வருகின்றார்கள்.   ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் திரண்டு நின்று எடப்பாடிக்கு எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர் .  இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு செல்வாக்கு குறைந்து கொண்டே வருகிறது என்கிறது அதிமுக வட்டாரம்.