ஆளுநர் ஆகிறாரா ரஜினிகாந்த்?

 
rg

ரஜினியின் டெல்லி விசிட்,  அதன் பின்னர் தமிழக ஆளுநருடான சந்திப்பும் தமிழக அரசியலில் மீண்டும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.   அரசியலுக்கு வர மாட்டேன் என்று ரஜினி உறுதியாக சொல்லி விட்டதால் இந்த முறை ரஜினியை அரசியலோடு இணைத்து அவ்வளவாக பேச்சு எழவில்லை. ஆளுநருடன் அரசியல் பேசினேன் என்று அவர் சொன்னதுதான் சலசலப்பை ஏற்படுத்தின. 

m

ரஜினி அரசியலுக்கு வர தயங்குவதால்,   அவருக்கு இருக்கும் செல்வாக்கை 2024 நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தலாம் என்று பாஜக மேலிடம் குறிப்பாக பிரதமர் மோடி விரும்புவதாக தகவல்.  ரஜினியை வைத்து பாஜகவுக்கு பலம் கூட்ட மோடி விரும்பினாலும்  அமித்ஷாவுக்கு அதில் விருப்பமில்லையாம்.

 தனிக்கட்சி தொடங்கி பாஜகவுக்கு ரஜினி ஆதரவளிப்பார் என்று எதிர்பார்த்து இருந்த அமித்ஷா அதில் ஏமாற்றம் அடைந்ததிலிருந்து ரஜினி மீது அதிருப்தியில் உள்ளாராம்.  ஆனால் பிரதமர் மோடி மட்டும் ரஜினிக்கு இருக்கும் செல்வாக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நினைக்கிறாராம்.   அமித்ஷாவை போலவே பாஜகவில் உள்ள பலரும் ரஜினியை விரும்பவில்லையாம்.  அதே நேரம்  பிரதமரை போலவே பாஜகவின் சீனியர்கள் பலர் ரஜினியின் செல்வாக்கை பயன்படுத்திக் கொள்ளலாமென்று  நினைக்கிறார்களாம்.

a

அரசியலைப் பொறுத்தவரைக்கும் தெளிவான ஒரு முடிவை பலகாலம் எடுக்க தவறியதால் ரஜினி  மீது பலரும் நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார்கள்.  அதனால் தமிழகத்தில் அவருக்கு பெரிதாக அவரது வாய்ஸ் எடுபடாது என்று பாஜகவினர் பலரும் நினைக்கிறார்களாம்.  ஆனால் மோடியை போலவே சிலர் ரஜினியை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நினைப்பதால், கட்சி ரீதியாக ரஜினி பேச தயங்குவதால்,   கட்சி சாராத பொதுக்கூட்டங்கள் நடத்தி,  விழாக்கள் நடத்தி அதில் ரஜினியை பேச வைத்து அதன் மூலமாக பாஜகவுக்கு வாக்கு சேகரிக்கலாம் என்று திட்டமிடப்படுகிறதாம்.

 ரஜினியை ஏதாவது ஒரு சிறிய மாநிலத்திற்கு ஆளுநர் ஆக்கி அதன் மூலம் பாஜகவிற்கு தென் மாநிலங்களில் பலம் சேர்க்கலாம் என்றும் ஒரு திட்டம் இருக்கிறது என்கிறார்கள்.   ரஜினியை ஏதாவது ஒரு சிறிய மாநிலத்திற்கு ஆளுநராகலாம் என்கிற பேச்சு  டெல்லி பாஜக மேலிட வட்டாரத்தில் அதிகம் அடிபடுகிறது  என்கிறார்கள்.