இயேசு கிறிஸ்து கடவுளின் வடிவமா? சர்ச்சை பாதிரியாருடன் ராகுல் உரையாடல் - வைரலாகும் வீடியோவுக்கு பாஜக கண்டனம்

 
ra

இயேசு கிறிஸ்து கடவுளின் வடிவமா? அது உண்மைதானா? என்ற கேள்வியை ராகுல் காந்தி எழுப்ப அதற்கு சர்ச்சை பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா,  இயேசு தான் உண்மையான கடவுள் என்று சொல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.  இதற்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  காங்கிரஸ் நிர்வாகிகளும் இதற்கு பதில் அளித்து வருகின்றனர்.

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி , பாரத் ஜோடோ யாத்ரா நடைபயணத்தை துவங்கி இன்று நாலாவது நாள் நடை பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.  இந்த நிலையில் கன்னியாகுமரியில் அவர்  சர்ச்சைக்குரிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை சந்தித்து உரையாடியது சலசலப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

j

 இயேசு கிறிஸ்து கடவுளின் வடிவமா? அது உண்மைதானா? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்ப,  அதற்கு ஜார்ஜ் பொன்னையா,  இயேசு தான் உண்மையான கடவுள். தன்னை ஒரு மனிதனாக உண்மையான மனிதனாக வெளிப்படுத்துகின்றார் . நாம் கடவுளை மனிதனாக பார்க்கிறோம் எனச் சொல்லும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளன.

 இந்த வீடியோ வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .  இதற்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.   பாரத மாதாவை தகாத வார்த்தைகளால் பேசி சிறைக்குச் சென்றவர் ஜார்ஜ் பொன்னையா.   அந்த சர்ச்சுக்குரிய சர்ச்சைக்குரிய பாதிரியாரை ராகுல் காந்தி சந்தித்ததன் நோக்கம் என்ன? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ku

 இதற்கு பதில் அளித்துள்ள காங்கிரஸ் நிர்வாகி ஜெய்ராம் ரமேஷ்,    மகாத்மா காந்தியின் கொலை,  நரேந்திர தபேல்கர்,  கோவிந்த பன்சாரே,  கல்புர்க்கி,  கௌரி லங்கேஷ் கொலைகளுக்கும் காரணமானவர்கள் தான் தேச நலன் குறித்த கேள்விகளை எழுப்புகின்றார்கள்.     என்ன ஒரு மோசமான நகைச்சுவை என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.