ஜெயிலர் கடைசிப்படமா? தமிழக ஆளுநர் ஆகிறாரா ரஜினி?

 
rm

 தமிழக ஆளுநராக ரஜினிகாந்த் நியமிக்கப்பட அதிகம் வாய்ப்பு இருப்பதாக இந்தியா டுடே செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.   தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை ரஜினிகாந்த் திடீரென்று சந்தித்ததும் ,  ஆளுநர் உடன் அரசியல் குறித்து பேசினேன் என்று ரஜினிகாந்த் சொன்னதும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் ஆளுநருடனான  திடீர் சந்திப்பு ஏன் என்று பரபரப்பு எழுந்திருக்கும் நிலையில் தமிழக ரஜினிகாந்த் நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது.

ரஜினிகாந்த்தை பாஜகவில் இணைக்க வேண்டும் என்று கட்சி மேலிடம் தீவிர முயற்சிகள் எடுத்து வந்தன .  அப்படி இல்லாவிட்டாலும் கூட ரஜினி தனிக்கட்சி தொடங்கி பாஜகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று பாஜக மேலிடம் விரும்பியது.   ஆனால் இது எதுவுமே நடக்காமல் போனதால் ரஜினி மீது அதிருப்தியில் இருந்தது பாஜக மேலிடம்.   ஆனாலும் கூட ரஜினியின் செல்வாக்கை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும்,  அது எந்த வகையில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும்  பாஜக மேலிடம் யோசிக்கிறது.

mo

கட்சியாக ரீதியாகத் தானே ரஜினி உடன்பட மறுக்கிறார் .  பாஜக சாராத விழாக்களில் அவரை பங்கேற்க வைத்து பாஜகவுக்கு ஆதரவாக பேச வைக்கலாம் என்று பாஜக மேலிடம்  ஆலோசித்து வந்திருக்கிறது.   இந்த நிலையில் தான் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசினார் .இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று சிலர் சொல்லி வந்தனர்.  ரஜினியும் அதையே சொல்லி இருந்தால் கூட அத்தோடு முடிந்து போய் இருக்கும்.  ஆனால் ஆளுநருடன் அரசியல் பேசினேன் என்று அவர் சொன்னது தான் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.

 ஆளுநருடன் அரசியல் பேசுவதற்கு ஆளுநர் மாளிகை என்ன கட்சி அலுவலகமா?  அப்படியே அரசியல் பேசினாலும் ஊடகத்தினருடன் அதை பகிர்ந்து கொள்ள முடியாத அளவிற்கு அப்படி என்ன அரசியல் பேசினார்கள்? என்ற சலசலப்பு சர்ச்சை எழுந்தன.

ர்

 இந்த நிலையில் ரஜினிக்கு தமிழக ஆளுநர் பதவியை வழங்க இருக்கிறது பாஜக.   அது தொடர்பாக ரஜினியிடம் பேசியதை அடுத்து தான் மரியாதை நிமித்தமாக தற்போதைய தமிழக ஆளுநர் ரவியை சந்தித்து பேசினார் ரஜினி என்று இந்தியா டுடே செய்தி மூலம் தெரிய வருகிறது. தமிழக ஆளுநர் ஆனால்  அவர் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளும்போது, கட்சி ரீதியாக பேச முடியாவிட்டாலும் கூட பிரதமரை புகழ்ந்து பேசலாம் அவரது ஆட்சியை புகழ்ந்து பேசலாம் அது மக்களின் கவனத்திற்கும் செல்லும் என்று கணக்கு போடுகிறது பாஜக.

 ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தான் துவங்குகிறது.   அடுத்தடுத்தும் ரஜினி படங்களில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வருகின்றன.  ஒருவேளை அவர் ஆளுநர் பதவியை ஏற்பதாக இருந்தால் ஜெயிலர் திரைப்படம் தான் திரைவாழ்வில்  ரஜினியின் கடைசி படமாக இருக்கும் என்று தெரிகிறது.