இபிஎஸ் தனிக்கட்சியா?அவர்கள் ஏன் சமாதானப்படுத்தவில்லை?

 
எஇ

தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளர் திரெளபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவிக்கும் நிகழ்ச்சியில் எடப்பாடி - ஓபிஎஸ் இருவருமே ஒரே ஓட்டலில் இருந்தாலும், எடப்பாடி முன்வரிசையில் அமர்ந்து முதலில் மேடையேற, தனியறையில் காத்திருந்து எடப்பாடிக்கு பின்னரே மேடையேறி இருக்கிறார் ஓபிஎஸ்.  

எ

பாஜக நினைத்திருந்தால் ஒரே நேரத்தில் எடப்பாடியையும் ஓபிஎஸ்சையும் மேடையேற்றியிருக்கலாம். ஆனால் ஏன் செய்யவில்லை என்ற சலசலப்பு எழுந்திருக்கிறது.  பிரதான கட்சியில் இரு தலைவர்களுக்கு இடையே மன வருத்தங்கள் இருக்கும்போது அவர்களுக்கு இடையே சமாதான முயற்சியை கூட ஏன் பாஜக முன்னெடுக்கவில்லை.  அதிலும் சீனியர் ஓபிஎஸ்சை  காக்க வைத்துவிட்டு,  எடப்பாடியை முதலில் மேடையேற்றியதும் சலசலப்பை கூட்டியிருக்கிறது.

இதற்கிடையில், ஒருவேளை  அதிமுக எடப்பாடி வசம் ஆகிவிட்டால் ஓபிஎஸ் தனிக்கட்சி ஆரம்பிக்கப்போவதாகவும் தகவல் பரவுகின்றன.  இதுகுறித்து ஓபிஎஸ் ஆதரவாளர் ஆவின் வைத்தியநாதன் விளக்கம் அளித்திருக்கிறார்.

அவர்,  ‘’ஆணவத்தின் உச்சத்தில் இருக்கிறார் எடப்பாடி.   எம்ஜிஆரை விட தன்னை பெரிய ஆளாக நினைத்துக் கொண்டிருக்கிறார்.  அதனால் எடப்பாடி உடன் இனி எந்த மேடையையும் ஓபிஎஸ் பகிர்ந்து கொள்ள வாய்ப்பில்லை’’என்கிறார்.

ஆ

அவர் மேலும்,   ’’மகாபாரதத்தில் பாண்டவர்கள் ஐந்து பேர் தான்.   ஆனால் கௌரவர்களை எதிர்த்து இறுதியில் பஞ்சபாண்டவர்கள் தான் வெற்றி பெற்றார்கள். அதேபோல்தான் தற்போது கௌரவர்கள் ஆன இபிஎஸ் அணியை பாண்டவர்கள் ஒபிஎஸ் அணி வெல்லும்.  அப்போது தனிக்கட்சி தொடங்க வேண்டிய அவசியம் ஓபிஎஸ்க்கு இருக்காது .  எடப்பாடிக்குத் தான் தனிக்கட்சி தொடங்க வேண்டிய அவசியம் இருக்கு. ஓபிஎஸ் தனிக்கட்சி தொடங்க வேண்டிய அவசியம் ஒருபோதும் வராது’’ என்று தெரிவித்துள்ளார்.

ப்ப்ப்

 பாஜக சமாதான முயற்சியை எடுக்காதது குறித்து எழுந்திருக்கும் கேள்விக்கு,  ’’ஊரு ரெண்டு பட்டால் யாருக்கோ மகிழ்ச்சி.  அப்படித்தான் எடப்பாடிக்கும் ஓபிஎஸ் க்கும் இடையேயான சண்டையால் அதிமுக பலவீனப்படுவதை பாஜகவும், திமுகவும் விரும்பும் .  அப்படி இருக்கும்போது அதிமுக தலைவர்களை பாஜகவினர் சமாதானப்படுத்துவார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?’’என்று வெளிப்படையாக போட்டு உடைக்கிறார்.