ரஜினி-ஓபிஎஸ்-சசிகலாவை இணைக்க முயற்சியா?

 
rs

எதுவுமே பேசாமல் ரஜினிகாந்த்  அமைதியாக இருந்தாலே ‘என்னமோ திட்டமிருக்கு?’என்று பரபரப்பை கூட்டுவார்கள்.  இதில், அரசியல் பேசினேன் என்று சொன்னால் விடுவார்களா என்ன?  ஆளுநருடன் அரசியல் குறித்து பேசினேன் என்று ரஜினி சொன்னதை அடுத்து மீண்டும் ரஜினியை அரசியலுக்குள் இழுத்து பரபரப்பான பேச்சுக்கள் எழுகின்றன.

sr

 ஆண்டவன் நினைத்தால் அரசியலுக்கு வருவேன் என்று 25 ஆண்டுகளுக்கு மேல் சொல்லி வந்த ரஜினிகாந்த்,  கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது தனிக்கட்சி ஆரம்பித்து தேர்தலை சந்திப்பதாக முடிவு எடுத்து , அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து , கட்சியின் பெயரை அறிவித்து பிரச்சாரத்துக்கு தயாராகும் நிலையில்  கடைசியில் கட்சி ஆரம்பிக்கவில்லை என்று அறிவித்து விட்டார்.  தற்போது மட்டுமல்ல இனி எதிர்காலத்தில் அரசியலுக்கு வரும் வாய்ப்பு துளியும் இல்லை என்று அறிவித்து விட்டார்.

rr

 அதன் பின்னர் ரஜினியை  அரசியலுடன் தொடர்புபடுத்தி பேச்சுக்கள் எழாமல் இருந்தன.  அவரை  சினிமாவுடன் மட்டுமே  தொடர்புபடுத்தி பேச்சுக்கள்  இருந்து வந்தன.  இந்த நிலையில் ரஜினி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து விட்டு வந்திருக்கும் நிலையில்,   அதுவும் அரசியல் குறித்து பேசினேன் என்று சொல்லி இருக்கும் நிலையில்,  மீண்டும் ரஜினியின் அரசியல் பரபரப்பாகிவிட்டன.

ss

 அதிமுக தற்போது இபிஎஸ் அணி ஓபிஎஸ் அணி என்று இரண்டு அணிகளாக பிரிந்து நிற்கிறது.   ஸ்டார் அந்தஸ்து இல்லாததால் தான் அந்த கட்சிக்கு இந்த சிக்கல் என்கிறார்கள்.    இதே நிலைமை நீடித்தால் அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தல் சட்டமன்றத் தேர்தல்களில்  அதிமுக வெற்றி பெறுவது என்பது சாதகம் இல்லை என்றே கருதுகிறது பாஜக.  அதிமுகவின் கூட்டணி பலத்தை நம்பியிருக்கும் பாஜக இந்த விசயத்தை  பெரிதாக எடுத்துக் கொண்டிருக்கிறது. 

ro

 ஆகவே,  எடப்பாடியை ஓரங்கட்டி விட்டு ரஜினியை தலைமையாகக் கொண்டுவரலாம்,  அவரின் கீழ் ஓபிஎஸ் சசிகலாவை கொண்டு வந்து ஒட்டுமொத்த அதிமுகவையும் ரஜினி கைக்குள் கொண்டு வந்து விட பாஜக திட்டம் போட்டு வருவதாகவும் ,  ரஜினி ஸ்டார் அந்தஸ்தில்  ஓபிஎஸ் சசிகலா என்ற பலத்தில்  2024 நாடாளுமன்ற தேர்தல் ,2026 சட்டமன்றத் தேர்தலை சந்திக்க பாஜக திட்டமிட்டு இருக்கிறது என்று தகவல் பரவுகிறது.  அதே நேரம் எம்ஜிஆரையும்  ஜெயலலிதாவையும் ஏற்றுக்கொண்ட அதிமுகவினர் எடப்பாடியையும் ஓபிஎஸ்சையுமே  ஏற்றுக்கொள்ள தயக்கம் காட்டி வரும் அதிமுகவினர், ரஜினியை ஏற்றுக் கொள்வார்களா? என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.