4777 கோடி பெரியதா? 176000 கோடி பெரியதா? பாஜக -திமுக மோதல்
ரயில் நிலையத்தில் டீ விற்ற ஒரு சாமானியன் இன்று ஒட்டுமொத்த ரயில்வேயையே தனியாருக்கு விற்கும் நிலைக்கு உயர்ந்த உள்ளார் என்றால் அந்த மனிதரை பார்த்து படித்து தெரிந்துகொள்ளதானே வேண்டும் என்று சொல்லி இருந்தார் திமுக மாணவரணி தலைவர் ராஜீவ்காந்தி.
இதற்கு பாஜக பதிலடி கொடுத்திருந்தது. ’’ரயிலில் பயணம் செய்வதற்கு கட்டணமே செலுத்தாமல் (வித்தவுட்டில்) சென்ற சாமானியர்கள், அதே ரயிலில் சொகுசு 'சலூன் கோச்சில்' செல்லும் அளவிற்கு உயர்ந்துள்ளார்கள் என்றால், அந்த சலூன் கோச்சில் அவர்களை பயணம் செய்ய வாய்ப்பளித்தவர்களை பார்த்து வியக்கத்தானே வேண்டும்?’’என்றார் தமிழக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி.
அரசின் நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் மூலமாக தென்காசிக்கு புறப்பட்டார் . முதல்வர் பயணித்த ரயில் பெட்டி சலூன் கோச் பெட்டி ஆகும். இது பல்வேறு வசதிகளை கொண்டது . குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர், ஆளுநர், முதல்வர் போன்ற உயர் பதவிகளில் இருப்பவர்களுக்காக ரயில்வே நிர்வாகம் இதை பிரத்தியேகமாக உருவாக்கி இருக்கிறது. இதில் பயணம் செய்ய 2 லட்சம் ரூபாய் கட்டணம். இதனால்தால் ரயிலில் டீ வித்தவர் என்று சொன்ன ராஜீவ்காந்திக்கு, ரயிலில் வித்தவுட்டில் வந்தவர் என்று பதிலடி கொடுத்திருந்தார் நாராயணன்.
இந்த நிலையில் இன்று ராஜீவ்காந்தி, “டீ” கடைக்காரர் மோடி அவர்களை தலைவராக மாற்ற மக்கள் வரி பணத்தில் கடந்த 7 ஆண்டுகளில் செலவு செய்யப்பட்ட தொகை Rs 477700000000 (4777 கோடி ) ரூபாய்… அடுத்த பிரதமர் வேட்பாளர் நம்ம ஆட்டுகார அண்ணாமலைக்கு எவ்வளவு பி.எல்.சந்தோஷ் சார்?’’என்று கேட்கிறார்.
இதற்கு பாஜகவினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
"முரசொலி முட்டாளே" , அது மத்திய அரசின் ஒட்டு மொத்த செலவு. இதுவே விடியா அரசின் செலவு பற்றி வெளியிட தயாரா? என்று கேட்கிறார் கே.எம்.எஸ். முரளி. ரெண்டு பேரோட சொத்து மதிப்ப கணக்கெடுப்போமா...? நாட்டுக்காக உழைத்தவர் யார்... குடும்பத்துக்காக உழைத்தவர் யார் என்பது நன்றாகத் தெரியும் அப்போது..
நீ சொல்லு 4777 கோடி பெரியதா? 176000 கோடி பெரியதா? 17600000000000 . நீ கணக்கு போடு. ராஜாவும், அக்காவும் பெரிய ஆளுங்கதான். கூட்டு கொள்ளை அடித்தவங்க. அட நன்னாரி நீங்க ஸ்டாலினை விளம்பரப்படுத்த வச்சு இருக்கும் தொலைக்காட்சி நிறுவன செலவுகளை கணக்கெடுத்தால் இந்தியாவுக்கே பட்ஜெட் போடலாம் என்று சொல்லி வருகின்றனர்.
“டீ” கடைக்காரர் மோடி அவர்களை தலைவராக மாற்ற
— R.Rajiv Gandhi (@rajiv_dmk) December 12, 2022
மக்கள் வரி பணத்தில் கடந்த 7 ஆண்டுகளில் செலவு செய்யப்பட்ட தொகை Rs 477700000000 (4777 கோடி ) ரூபாய்…
அடுத்த பிரதமர் வேட்பாளர் நம்ம ஆட்டுகார அண்ணாமலைக்கு எவ்வளவு @blsanthosh sir…. pic.twitter.com/7LMFneloQv