அமைச்சர் முகத்தில் மை வீச்சு - சட்டசபைக்குள் இங்க் பேனாவுக்கு தடை

 
in

சட்டசபைக்குள் நுழையும் அனைவரின் பேனாக்களும் பாதுகாப்பு அதிகாரிகளால் சோதனை செய்யப்படுகின்றன .   இங்கு பேனா குறிப்பாக இங்க் பேனாக்கள் கொண்டு செல்ல தடை செய்யப்பட்டிருக்கின்றன. மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவைக்குள் தான் இந்த சோதனை நடக்கின்றன.  அமைச்சர் மீது மை வீசப்பட்டு உள்ளதால்  இந்த தடை கொண்டுவரப்பட்டிருக்கிறது.

h

 மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜகவின் தலைவரும் உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வி அமைச்சருமானவர் சந்திரகாந்த் பாட்டில் . இவர் வரலாற்று ஆளுமைகளை இழிவுபடுத்தும் விஷமாக பேசிய பேச்சுகளுக்காக அவர் மீது மைதாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.   இந்த சம்பவத்தினால் பல அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

 இந்த நிலையில் தான் சட்டமன்ற வளாகத்திற்குள் நுழையும் அனைவரின் பேனாக்களும் பாதுகாப்பு அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டு இங்க் பேனாக்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்படுகின்றன. 

 குளிர்கால கூட்டத் தொடருக்காக சட்டப்பேரவைக்குள் நுழைந்த எம்எல்ஏக்கள், எம்எல்சிகள் கையில் வைத்திருந்த பேனாக்களை எடுத்துச் சென்றிருக்கிறார்கள். ஆனால் சட்டமன்ற உறுப்பினர்களை தவிர அங்கு செல்லும் மற்ற அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு இங்கு பேனாவுடன் நுழைய தடை விதிக்கப்பட்டிருக்கிறது. 

 கடந்த டிசம்பர் 10ஆம் தேதி இந்த மை வீச்சு சம்பவம் நடந்துள்ளது.   இதில் அதிர்ச்சி அடைந்த அமைச்சர் சந்திரகாந்த் பாட்டில் கடந்த வாரத்தில் இறுதியில் கலந்து கொண்ட மற்றொரு விழாவிலும் முகத்தில் ஹெல்மெட் அணிந்து பாதுகாப்பு கவசத்தோடு பங்கேற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.