இந்தியா என்பது இந்துக்களின் நாடு - ஆ.ராசாவுக்கு பிரேமலதா பதிலடி

 
p

இந்து மதத்தையும் இந்து மத பழக்க வழக்கங்களையும் இந்து மத சம்பிரதாயங்களையும் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார் ஆ.ராசா.   இதனால் ஆ .ராசா மாற்று சமூகத்தைச் சேர்ந்தவரா என்று கேள்வியும் தொடர்ந்து எழுந்து வருகிறது.  

p

 இந்த நிலையில் அண்மையில் சென்னையில் திராவிடர் கழக தலைவர் கி. வீரமணிக்கு நடந்த பாராட்டு விழாவில் பேசிய ராசா எம்பி,  நீ கிறிஸ்தவனாக இல்லாமல் இருந்தால்.. இஸ்லாமியனாக இல்லாமல் இருந்தால் ..பெர்சியனாக இல்லாமல் இருந்தால்.. நீ இந்துவாகத் தான் இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சொல்கிறது .  இப்படிப்பட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது உண்டா?  இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன்.   சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன்.  இந்துவாக இருக்கும் வரை நீ பஞ்சவன். இந்துவாக இருக்கும் வரை நீ தீண்டத்தகாதவன்.  இப்போது சொல்லுங்கள் எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்?  எத்தனை பேர் தீண்டத்தகாதவனாக இருக்க விரும்புகிறீர்கள்? இந்த கேள்வியை உரக்கச் சொன்னால்தான் அது சனாதனத்தை முறியடிக்கின்ற அடி நாதமாக அமையும் என்றார்.

ஆ.ராசாவின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

d

 தேமுதிக தொடங்கி 17 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் 18 ஆம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.   கட்சி பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இந்நிகழ்வில் பங்கேற்று கொடியேற்றி வைத்தார்.   பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, விஜயகாந்தின் உடல்நிலை குறித்த கேள்விக்கு கேப்டனின் உடல்நிலை காரணமாக கட்சியில் சற்று தொய்வு இருக்கலாம் .  ஆனால் எந்த நோக்கத்திற்காக கட்சி உருவாக்கப்பட்டதோ  அதை நோக்கி தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறது என்றார்.

pd

 நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி குறித்த கேள்விக்கு,  2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்வு தேர்தலுக்காக தேமுதிக தயாராகி வருகிறது.   ஆனால் யாருடன் கூட்டணி என்பது குறித்து இப்போது முடிவு செய்யவில்லை.   இன்னும் இரண்டு ஆண்டு அவகாசம் உள்ளது.  அதற்குள் கட்சி வளர்ச்சி பணிகள் மட்டுமே கவனிக்கப்பட வேண்டியது இருக்கிறது.   கூட்டணி பற்றி உரிய நேரத்தில் உரிய முடிவு எடுக்கப்படும் என்றார்.

திமுக எம் பி ஆ. ராசா இந்து மதம் குறித்தும் இந்துக்கள் குறித்தும் பேசி இருப்பது குறித்து கேள்விக்கு,   ஆ. ராசா சொன்ன கருத்து ஏற்புடையது அல்ல.  இந்தியா என்பது இந்துக்கள் நாடுதான்  என்று அடித்துச் சொன்னார்.