இன்பநிதி முதல்வராக வருவார்; அந்த குடும்பம்தான் தமிழ்நாட்டை காப்பாற்றும் - விபி ராஜன்

 
i

முதல்வர் மு.க.ஸ்டாலினின் பேரன் இன்பநிதி தமிழக முதல்வராக வேண்டும் என்கிறார் திமுக முன்னாள் எம்எல்ஏ விபி ராஜன்.  அவர் மேலும்,  தமிழகத்தை காப்பாற்றும் ஒரே குடும்பம் இதுதான் என்கிறார்.

in

என்னதான் வாரிசு அரசியல் என்று எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் செய்து வந்தாலும் திமுகவில் கருணாநிதி, அவருக்கு அடுத்து ஸ்டாலின், அவருக்கு அடுத்து உதயநிதி என்று வந்துவிட்டது.   இவருக்கு அடுத்து இன்ப நிதி என்று இப்போதே  திமுக அமைச்சர்களும் எம்எல்ஏக்களும் பேச ஆரம்பித்து விட்டார்கள்.

 இதுநாள் வரை உதயநிதி ஸ்டாலினை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.   அவர் அமைச்சராகிவிட்டதும் அடுத்து முதலமைச்சராகி விடுவார் என்று எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான்.  இதை அடுத்து உதயநிதியின் மகன் இன்பநிதி பற்றி இப்போது பேச ஆரம்பித்து விட்டார்கள்.

 அமைச்சர் கே. என். நேரு ,  உதயநிதி என்ன.. உதயநிதியின் மகன் வந்தாலும் ஆதரிப்போம் என்று சொல்லி இருக்கிறார். 


 இந்த நிலையில் திமுக முன்னாள் எம்எல்ஏ விபி ராஜன் கடலூரில் நடந்த திமுக கூட்டத்தில் பேசிய போது,   ஸ்டாலின் வந்தார்.  இப்போது சின்னவர் உதயநிதி வந்து விட்டார்.  நாளைக்கு ஒரு ஆசை இருக்கு.  அதுவரைக்கும் ஆண்டவன் எனக்கு உயிர் கொடுக்க போவதில்லை.  எனக்கு ஒரு ஆசை.. ஐயா இன்ப ஐயாவையும் அடுத்த முதலமைச்சராக ஆக்கிட்டு சாகனும் என்று ஆசை.

 அந்த குடும்பம் தான் நமக்கு சரியாக வரும். அந்த குடும்பம்தான் தமிழ்நாட்டை காப்பாற்றும். ஆக , இன்பா யாருன்னா ஐயா உதயநிதி அய்யாவோட பையன். எங்க தளபதி மு. க. ஸ்டாலின் பேரன்.  அவர் இந்த நாட்டுக்கு முதலமைச்சராக வருவார் என்று உணர்ச்சிவசப்பட்டிருக்கிறார்.