தமிழகத்தில் முக்கையும் நுழைப்பேன் வாலையும் நுழைப்பேன்- தமிழிசை ஆவேசம்
தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் ஆளுநராக இருக்கும் தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா ஆளுநராக தனது மூன்றாண்டு கால பயணம் குறித்து எழுதி இருக்கும், ரீடிஸ்கவரிங் செல்ப் இன் செல்ப்லெஸ் சர்விஸ் புத்தகத்தை சென்னையில் இன்று வெளியிட்டார்.
இந்த புத்தக வெளியீட்டு விழாவில் அவர் பேசிய போது, ’’தெலுங்கானாவில் என்னை குடியரசு தினத்தன்று கொடியேற்ற விடவில்லை. நான் ராஜ்பவனில் மட்டுமே கொடி ஏற்றினேன் . ஆளுநர் உரையாற்றவும் விடவில்லை . எவை எப்படி இருந்தாலும் நான் என் பணியில் இடையூறு செய்யவில்லை என்பது மட்டுமல்ல இடைவெளியும் விடவில்லை’’ என்றார்.
அவர் மேலும், ‘’எனக்குத் தெரிந்த ஒருவர், தமிழிசை எப்போது பார்த்தாலும் இங்கு தான் இருக்கிறார். அவர் , ஆளுநராக வகிக்கும் அந்த இரண்டு மாநிலங்கள் என்ன ஆகுது? என்று கேள்வி கேட்டார் . இரண்டு மாநிலங்களிலும் எதுவும் ஆகவில்லை. எப்போது பார்த்தாலும் தெலுங்கானாவில் இருப்பதாக புதுச்சேரியில் இருப்பவர்கள் கூறுகின்றார்கள். புதுச்சேரிக்கு வந்தால் தெலுங்கானாவில் விரட்டி விட்டார்களா என்று நாராயணசாமி கேட்கிறார். எப்போது பார்த்தாலும் புதுச்சேரியிலேயே இருப்பதாக சொல்லுகிறார்.
தமிழகத்தில் இருப்பவர்களோ மற்ற இரண்டு மாநிலங்கள் என்ன ஆகுது? என்று கேட்கின்றார்கள். இன்றைக்கு சொல்லுகிறேன்.. தெலுங்கானாவில் முழுமையாக பணிபுரிகிறேன்.. புதுச்சேரியிலும் முழுமையாக பணிபுரிகிறேன். அந்த மாநிலங்களில் விரட்டுவதால் தமிழகத்தில் ஏன் மூக்கை நுழைக்கிறீர்கள்? வாலை நுழைக்கிறீர்கள் என்று கேட்கின்றார்கள். தமிழகத்தில் முக்கையும் நுழைப்பேன் வாலையும் நுழைப்பேன். தலையை நுழைப்பேன்..காலையும் வைப்பேன்
தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டுவேன் யாரும் என்னை தடுக்க முடியாது தடுக்க முடியாது என்றார் ஆவேசத்துடன்.