இளையராஜாவின் கையில்... மோடியின் எட்ட முடியாத எட்டு ஆண்டு கால சாதனைகள் புத்தகம்

 
i

சனாதன இந்து தர்ம எழுச்சி மாநாடு கடலூரில் 2023ல் ஜனவரி மாதம் 21ம் தேதி  நடைபெறும் என்று இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜூன் சம்பத் கடந்த மாதத்தில் அறிவித்திருந்தார்.  

சனாதன ஒழிப்பு மாநாடு எதற்காக என்றால், கோயில்கள் மீது தாக்குதல், இந்து கடவுளை அவமதித்தல், தொடர்ந்து இந்து தலைவர்கள் மீது தாக்குதல், மோசடி மதமாற்றம், பயங்கரவாதம் இவற்றுக்கு எதிராக நடைபெறுகிறது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.   இந்த மாநாட்டில் செயல்பட விரும்புவோர் உடனடியாக தொடர்புகொள்ளவும் என்றும் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில் இன்று,  கடலூரில் ஜனவரி 21ல் நடைபெறும் சனாதன இந்து தர்ம எழுச்சி மாநாடு அழைப்பிதழ் மற்றும் நரேந்திர மோடியின் எட்ட முடியாத எட்டு ஆண்டு கால சாதனைகள் புத்தகம் இசைஞானி இளையராஜாவிடம் வழங்கினார் அர்ஜுன் சம்பத்.  

ia

அழைப்பிதழ் மற்றும் புத்தகம் வழங்கி, இளையராஜாவிடம்  ஆசிகள் பெற்றோம் என்றும் அவர் நெகிழ்ந்து கூறியிருக்கிறார்.

 வரும் ஜனவரி 29 இல் கடலூரில் சனாதன இந்து தர்ம எழுச்சி மாநாடு நடைபெற இருப்பதை முன்னிட்டு,  பேரணி -மாநாடு -பொதுக்கூட்டம் ஆகியவை நடத்தப்பட இருக்கின்றன.  இந்து மத தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் ,சாமியார்கள் என்று பலரும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கின்றார்கள்.  இதற்கான விளம்பரப் பணிகளையும் இந்து மக்கள் கட்சி  தொடங்கி நடத்தி வருகிறது. 

 சமூக வலைத்தளங்களில் இதற்கான பணிகளை கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.  சினிமா மற்றும் அரசியல் பிரபலங்களை கொண்டு இந்த நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுக்க வைக்கும் பணிகளில் அக்கட்சியினர் ஈடுபட்டு இருக்கிறார்கள் .   அந்த வகையில் தான் பிரபல சினிமா மற்றும் நாட்டுப்புறப் பாடகர்கள் ஆன புஷ்பவனம் குப்புசாமி , அனிதா குப்புசாமி தம்பதியினர் இந்து மக்கள் கட்சியின் சனாதன மாநாடு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மக்களுக்கு அழைப்பு விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்கள்.

 இந்த வீடியோவை இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.   இந்த வீடியோவில் பேசிய புஷ்பவனம் குப்புசாமியும் அனிதா குப்புசாமியும்,   வணக்கம் வரும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் தேதி அன்று கடலூரில் சனாதன இந்து தர்ம மாநாடு நடைபெற இருக்கிறது.   இம் மாநாட்டில் தொலைந்து போன தொலைந்து வருகின்ற நம் பண்பாட்டு கலாச்சாரங்களை மீட்டெடுக்கும் விதமாக நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன.   எப்படி எல்லாம் நமது பண்பாடு கலாச்சாரங்கள் திசைகுமாறி சென்று கொண்டிருக்கிறது.  நமது அடையாளம் இதை நாம் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் . இதை மீட்டெடுக்க வேண்டும் என்பது தொடர்பான சொற்பொழிவுகள் நடைபெற இருக்கின்றன . பேச்சரங்கமும் நடைபெறுகிறது இசை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.  அதில் நாங்களும் பாடுகிறோம், எங்களுடைய இசை நிகழ்ச்சியும் இருக்கிறது என்று தெரிவித்திருந்தார்கள்.