அதப்பத்தி பேசினா அப்புறம் நாறிடும் -கடுப்பான பாஜக

 
as

அதைப்பற்றி எல்லாம் பேசினால் அப்புறம் நாறிவிடும் என்று திமுகவுக்கு எச்சரித்திருக்கிறது பாஜக.

மு

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த புதுப்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் பூத உடல் மதுரை விமான நிலையத்திற்கு வந்தபோது நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்த சென்றார்.   அப்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் மரியாதை செலுத்த வந்தார்.  முன்னதாக மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் டாக்டர் சரவணன் தனது கட்சியினருடன் சென்றிருந்தார்.

b

இதைப்பார்த்த அமைச்சர் பிடிஆர், ’’இங்கே வருவதற்கு உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? இவர்களையெல்லாம் யார் இங்கே உள்ளே விட்டார்கள்? ’’என்று ஆவேசமாக கேட்டார்.   ஆத்திரமடைந்த பாஜகவினர் அண்ணாமலையும் டாக்டர் சரவணனும் மரியாதை செலுத்திக்கொண்டிருந்த போது அங்கிருந்து புறப்பட்டு சென்ற அமைச்சர் பிடிஆர் கார் மீது செருப்பு வீசி எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதனால்  சம்பந்தப்பட்டவர்களை கைது செய்துள்ளனர்.  செருப்பு பிஞ்சிடும் அண்ணாமல என்று திமுக ஐடி அணியினர் ஹேஷ்டேக்கினை தேசிய அளவில் பரப்பி வருகின்றனர்.

bb

இதுகுறித்து தமிழக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி,  ‘’பத்து வருடங்கள் திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சியில் நாடு முழுவதும் குண்டுகள் வெடித்து நூற்றுக்கணக்கான மக்கள் மடிந்து, கோடிக்கணக்கான சொத்துக்கள் அழிக்கப்பட்டு கொண்டிருந்த நிலையில், கடந்த எட்டு வருடங்களாக எல்லையை தவிர்த்து, குண்டு வெடிப்பே இல்லாத பாதுகாப்பான இந்தியாவை நிர்வாகம் செய்துள்ள பாஜகவை பார்த்து "தகுதி இல்லையா" என்று கேட்க தகுதியும் இல்லை, உரிமையும் இல்லை திமுகவை சேர்ந்த பழனிவேல் தியாகராஜனுக்கு’’என்கிறார்.

nn

அவர் மேலும்,  ‘’பிணத்தை வைத்து அரசியல் செய்யும் சாக்கடை அரசியல் செய்ய வந்தது யார் என்று உங்களுக்கு தெரியும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.
 உதயகுமாரை, ஒன்றரை லட்சம் இலங்கை தமிழர்களை, முத்துக்குமாரை, அனிதாவை வைத்து அரசியல் செய்த சாக்கடை யார் என்பது உலகிற்கு தெரியும். 55 ஆண்டு கால தமிழக அரசியலை பேசினால் நாறி விடும்’’என்று எச்சரிக்கிறார்.