முதல்வருக்கு தெரியாமல் இது நடந்திருந்தால் கண்டிக்க வேண்டிய நிகழ்வு - பாஜக

 
மெ

மாண்டஸ் புயலினால் பாதிக்கப்பட்ட காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் சேதமடைந்த மீனவர்களின் விசைப்படகுகளை பார்வையிடுவதற்காக  தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கே.என் நேரு, சேகர்பாபு  மேயர் ப்ரியா ராஜன்,  துனை மேயர் மகேஷ் குமார் , சட்டமன்ற உறுப்பினர் ஜே .ஜே .எபிநேசர், மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி உள்ளிட்டோர் ஆய்வு  மேற்கொண்டனர்.

எ

முன்னதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட வந்த போது, முதலமைச்சர் கான்வாய் வாகனம் முன்பு   பாதுகாப்பு போலீசாரின் காரில் தொங்குவது போல சென்னை மேயர் பிரியா,  சட்டமன்ற உறுப்பினர் ஜே. ஜே .எபிநேசர்,  மாவட்ட செயலாளர் இளைய அருணா,   ஆணையர் ககன் தீப் சிங் பேடி தொங்கியவாறு வந்தனர். இதை வீடியோ எடுத்த செய்தியாளர்களை பார்த்ததும் மேயர் ப்ரியா முகத்தை மறைத்தவாறு திரும்பி கொண்டு தொங்கியபடியே சென்றார். 

இதுகுறித்து தமிழக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி,  ’’காசிமேட்டில் புயல் நிலவரங்களை பார்வையிட சென்ற முதல்வரின் வாகனத்தின் பின்னால் சென்ற வாகனத்தில் தொங்கியபடி சென்னை மாநகர மேயரும், மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி அவர்களும் சென்ற காட்சி அதிர்ச்சியளிக்கிறது. 

ஒரு அரசியல்வாதியாக மேயர் பிரியா வாகனத்தில் தொங்கி கொண்டு  சென்றதை கூட நம்மால் கடந்து சென்று விட முடியும். ஆனால் மிக மூத்த  இந்திய ஆட்சி பணி அதிகாரி (IAS) ஒருவர் வாகனத்தில்  தொங்கியபடி சென்றுள்ளது அவரின் அந்தஸ்துக்கு, பணியின் கௌரவத்திற்கு உகந்ததல்ல என்றே நான் கருதுகிறேன். முதலமைச்சரின் வாகனத்திலோ, தன் வாகனத்திலோ அவர் சென்றிருக்க வேண்டும். 

முதலமைச்சருக்கு தெரிந்து இந்த நிகழ்வு நடந்திருக்குமானால் துரதிர்ஷ்டவசமானது. தெரியாமல் நடந்திருந்தால் முதலமைச்சர் கண்டிக்க வேண்டிய நிகழ்வு இது’’என்கிறார்.