வேட்டி கட்டிய ஆம்பளையா இருந்தா ஓபிஎஸ் வீட்டு மேல் கைய வச்சுப்பார் - சையது கான் சவால்

 
o

அலுவலகத்திற்கு பூட்டு  போட்டு வெளியே காவலுக்கு நின்ற எடப்பாடி ஆதரவாளர்களை அடித்து துரத்தி விட்டு பூட்டை உடைத்து விட்டு உள்ளே நுழைந்தார்கள் ஓபிஎஸ்சும் அவரது ஆதரவாளர்களும்.  அப்போது முக்கிய ஆவணங்கள் சூறையாடப்பட்டு விட்டன என்று புலம்பி கொண்டிருக்கிறார்கள் எடப்பாடி தரப்பின்ர்.  

 இந்த நிலையில் ஓபிஎஸ் வசம் இருந்த எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை ஆ.பி. உதயகுமாருக்கு வழங்கி இருக்கிறார் எடப்பாடி.  ஓபிஎஸ் பற்றி அதிகமாக திட்டி வருவதால் அவருக்கு அந்த பொறுப்பை வழங்கி இருப்பதாக கட்சி வட்டாரத்தில் பேச்சு இருக்கிறது.  

dsa

 ஓபிஎஸ் அதிமுக அலுவலகத்தை சூறையாடியதால் அவரது வீட்டை சூறையாடுவோம் என்று ஆவேசப்பட்டார் ஆர்பி உதயகுமார் . மேலும் ஓபிஎஸ் மகன் ரவீந்திர நாத்து எம்பி தனது பதவியை ராஜினாமா செய்யது விட்டு புதிதாக தேர்தலை சந்திக்க வேண்டும் என்றும் சவால் விட்டார்.  ஓபிஎஸ்சை துரோகி என்றும்,  அவரது மாவட்டத்திலேயே உள்ளவர்கள் எல்லாம் எடப்பாடி பக்கம் வந்துவிட்டார்கள் என்று சொல்லி இருக்கிறார்.  திமுக அரசுக்கு எதிரான நடந்த ஆர்ப்பாட்டத்தில்தான் முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் இவ்வாறு சவால் விட்டிருந்தார்.

 இதற்கு ஓபிஎஸ் ஆதரவாளர் சையது கான் பதிலடி கொடுத்திருக்கிறார்.   தேனியில் நடந்த ஆர்ப்பாட்டம் மின் கட்டண உயர்வை கண்டித்து நடந்தது மாதிரி தெரியவில்லை.  ஓபிஎஸ்ஐ திட்டுவதற்காகவே அந்த கூட்டத்தை போட்டு இருக்கிறார்கள் .  அந்த கூட்டத்திற்கு 6000 பேர் எல்லாம் வரவில்லை.  வெறும் 2500 பேர் மட்டுமே வந்திருந்தார்கள்.   அதுவும் 6 மாவட்டங்களில்  இருந்து அழைத்து வந்திருக்கிறார்கள்.  

rpu

 ஓபிஎஸ் முதல்வராக இருந்தபோது கட்சியும் ஆட்சியும் ஒருவரிடமே இருக்க வேண்டும் என்று சொல்லி சசிகலாவை பொதுச் செயலாளராக முன்மொழிந்தார் ஆர். பி. உதயகுமார் .  அதன் பின்னர் சசிகலாவுக்கு துரோகம் செய்துவிட்டார் .  தன்னை முதலமைச்சர் ஆக்கிய சசிகலாவிற்கு எடப்பாடி பழனிச்சாமி துரோகம் செய்துவிட்டார்.  அவரை கட்சியை விட்டு நீக்கிவிட்டார்.  இவர்கள் இரண்டு பேரும் தான் துரோகிகள் ஓபிஎஸ் அல்ல என்று சொன்னவர்,

 தேனி மாவட்டத்தில் 16 ஒன்றிய செயலாளர்களின் 13 பேர் எங்க பக்கம் இருக்கிறார்கள்.  ஒன்பது நகர செயலாளர்களில் ஏழு பேர் எங்கள் பக்கம் இருக்கிறார்கள்.   நான்கு பொதுக்குழு உறுப்பினர்களில் மூன்று பேர் எங்கள் பக்கம் இருக்கிறார்கள் என்று விளக்கம் அளித்து இருக்கிறார்.  மேலும் ஓபிஎஸ்-க்கு அவர் மகனுக்கு விடுத்த சவால் குறித்து, ஓபிஎஸ் வீட்டை சூறையாடுவோம் என்கிறார்.  அதாவது உதயகுமார் மட்டுமல்ல அவரது அப்பன் வந்தாலும் முடியாது.  அவர் உண்மையிலேயே வேட்டி கட்டிய ஆம்பளையாக இருந்தால் ஓபிஎஸ் வீட்டை வந்து தொட்டுப் பார்க்கட்டும் என்று சவால் விடுத்தார்.  

 மேலும் ரவீந்திரநாத் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு தேர்தலை சந்திக்க வேண்டும் என்றால்,  உதயகுமார் உட்பட கட்சி ஒன்றாக இருக்கும் போது வெற்றி பெற்ற அனைவருமே தங்களது பதவியை ராஜினாமா செய்து விட்டு தேர்தலில் நின்று செல்வாக்கை நிரூபித்துக் காட்டட்டும் என்றார் அதிரடியாக.