பிடிஆர் கையை ஓங்கி இருந்தா பிரச்சனை வேறு மாதிரி ஆகியிருக்கும் - வெடிக்கும் சரவணன்

 
a

மாண்பற்ற அமைச்சர் பிடிஆர் பாஜகவினரை பார்த்து கையை ஓங்கி இருந்தா பிரச்சனை வேறு மாதிரி ஆகியிருக்கும்  என்று வெடித்தார் டாக்டர்  சரவணன்.

மதுரை விமான நிலையத்தில் ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி செலுத்திவிட்டு புறப்பட்டபோது அவர் காரை மறித்து கார் மீது பாஜகவினர் செருப்பு வீச அந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.  

ப்ப்

 அந்த சம்பவம் ஏன் நடந்தது என்பது குறித்து  முன்னாள் எம்.எல்.ஏவும்,  திரைப்பட நடிகரும், பாஜக மதுரை மாநகர் மாவட்ட தலைவரும், மதுரையின் பிரபல டாக்டருமான சரவணன் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.  அவர், ’’மாண்பற்ற அமைச்சர் பி. டி. ஆர் சொன்ன வார்த்தையால்தான் இந்த பிரச்சனை வந்தது.   பாஜகவுக்கு என்ன தகுதி இருக்குது இங்கே வர்றீங்க ?என்று கேட்டார். முதலில் அவருக்கு என்ன தகுதி இருக்கிறது இதை கேட்பதற்கு?   ஒன்றிய அரசு எனச் சொல்லி பிரிவினைவாதத்தை தூண்டும் அமைச்சர் பி. டி .ஆருக்கு என்ன தகுதி இருக்கிறது?’’ என்று வெடித்தார்.

ca

 மேலும்,   உயிரிழந்த லட்சுமணனுக்கு நான் வைத்தியம் செய்திருக்கிறேன் . அவர் குடும்பத்தினருக்கு என்னை தெரியும் .  அப்படி இருக்கும்போது,  இவங்களை எதுக்கு உள்ளே விடுறீங்க என பொதுமக்களை பார்த்து பி. டி. ஆர் கேட்கிறார்.  இவர் பேச்சைக் கேட்டு திமுகவே கொதித்துப் போய் இருக்கிறது.  தலைக்கனம் பிடித்த அமைச்சர் பி டி ஆர்.   அதனால் நிதி அமைச்சரை பொறுப்பில் இருந்து அகற்ற வேண்டும் முதல்வர்.   பண்பாடு இல்லாத அமைச்சர் பிடிஆர் தரம் தாழ்ந்து  இன்றைக்கு நடந்து கொண்டார்.  நாங்கள் அப்படி செய்தோமா?  அங்கே ஏராளமானோர் கூடி இருந்தார்கள். 

 ஆவேசமாக பேசிய அமைச்சர்பிடிஆர் அங்கே பாஜகவினர் மீது கையை ஓங்கி இருந்தால் பிரச்சனை வேறு மாதிரியாக இருந்திருக்கும். அதிமுகவை பார்த்து வெளியே போக சொல்லாதவர் பாஜகவை மட்டும் ஏன் வெளியே போகச் சொன்னார்.  பாஜகவிற்கு மக்களிடையே கிடைக்கும் வரவேற்பு பார்த்து அப்படி ஆத்திரப்பட்டிருக்கிறார்’’ என்றார்.

அவர் மேலும்,  ‘’பிடிஆர் எங்கு சென்றாலும் பாஜக எதிர்ப்பை பதிவு செய்யும்’’என்றார் அழுத்தமாக.