ரகசிய குறியீடுடன் அடையாள அட்டை! பொதுக்குழுவில் ஸ்கேனிங் மெஷின்

 
பர்

பொதுக்குழுவின் நுழைவு வாசலில் ஸ்கேனிங் மெஷின் வைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.   ரகசிய குறியீடன் பொருத்தப்பட்டிருக்கும் அடையாள அட்டையை இந்த மெஷினில் ஸ்கேன் செய்த பின்னர் தான் பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளே செல்ல முடியும் .  வெளியாட்கள்  உள்ளே வருவதை தடுக்க எடப்பாடி இந்த ஏற்பாடு செய்திருக்கிறார்.   2650 பொதுக்குழு உறுப்பினர்களுக்கும்  பார்கோடுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட இருக்கிறது.

 கடந்த ஜூன் மாதம் 23ஆம் தேதி அன்று சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு திருமண மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு கூடியது.  ஆனால் ஒற்றைத் தலைமை விவகாரத்தால் அந்த பொதுக்குழு களேபரத்துடன் பாதியிலேயே முடிந்தது.   இதனால் தற்போது மீண்டும் வரும் 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூடுகிறது என்று எடப்பாடி தரப்பு அறிவித்திருக்கிறது.   அதே ஸ்ரீவாரு திருமணம் மண்டபத்திலேயே பொதுக்குழு நடத்த ஏற்பாடுகள் நடந்த வருகின்றன.

எப்

 கடந்த முறை போல் அல்லாமல் இந்த முறை மண்டபத்திற்கு வெளியே வாகனங்கள் நிறுத்துமிடத்தில் பிரம்மாண்ட அரங்கு அமைக்கப்பட்டு வருகிறது.  3000 பேர் அமரக்கூடிய வகையில் அந்த அரங்கு அமைக்கப்பட்டு வருகிறது.   இதற்கான ஏற்பாடுகளை முன்னால் அமைச்சரும் திருவள்ளூர் மாவட்ட செயலாளருமான பெஞ்சமின் செய்து வருகிறார். 

 கடந்த முறை பொதுக்குழுவில் பொதுக்குழு உறுப்பினர்கள் அல்லாத வெளி ஆட்கள் நுழைந்து விட்டார்கள் என்ற குற்றச்சாட்டு இருந்தது.    கடந்த முறை வெறும் அடையாள அட்டை வழங்கப்பட்டிருந்த நிலையில் இந்த முறை பார்கோடு குறியீடுடன் அடையாள அட்டை வழங்கப்பட இருக்கிறது.  

கெ

 இது குறித்து பெஞ்சமின்,   ’’வரும் 11ஆம் தேதி திட்டமிட்டபடி பொதுக்குழு  நடக்கும் . இந்த பொதுக்குழுவில் எடப்பாடி பொதுச்செயலாளராக பொறுப்பேற்பது உறுதி.  பொதுக்குழுவுக்கு வரும் உறுப்பினர்களுக்கு பார்க்கோடு குறியுடன் அடையாள அட்டை வழங்கப்படுகிறது.   நுழைவு வாசலில் உள்ள ஸ்கேனிங் மெஷினில் இந்த அடையாள அட்டையை காட்டிய பின்னர் தான் உள்ளே செல்ல முடியும்.   ரகசிய குறியீடுடன் பொருத்தப்பட்டிருக்கும் அந்த அடையாள அட்டையை ஸ்கேன் செய்யும் போது வெளி ஆட்கள் உள்ளே வருவதை கண்டுபிடித்து விட முடியும் தடுத்து விடவும் முடியும் அதற்காகத்தான் இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது’’ என்கிறார்.   2650 பொதுக்குழு உறுப்பினர்களுக்கு இப்படி பார்கோடு அடையாள அட்டை வழங்கப்பட இருக்கிறது என்று, தெரிவித்திருக்கிறார்.

 அவர் மேலும்,   ’’பொதுக்குழு முடித்தவுடன் அனைவருக்கும் சைவ உணவு பரிமாறப்பட ஏற்பாடுகள் நடக்கின்றன.   3500 பேருக்கு உணவு ஏற்பாடு செய்யப்பட இருக்கிறது’’ என்று  தெரிவித்திருக்கிறார். 

பெ

 மேலும்,   ’’பொதுக்குழுவுக்கு வருகை தரும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்க பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.  தாரை தப்பட்டை, செண்டை மேளம், நாதஸ்வரம் வரவேற்பு அளிக்கப்பட இருக்கிறது . ஒயிலாட்டம், குதிரை, யானை  வரவேற்புக்கும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.  மகளிர் அணி கும்ப மரியாதையும் நடக்கிறது’’என்று சொல்லும் பெஞ்சமின்,  ’’அதிமுக பொது குழுவில் இதுவரைக்கும் இல்லாத அளவுக்கு வழி நெடுகிலும் பேனர்கள் போஸ்டர்கள் வைக்கப்பட இருக்கின்றன.    வாழை,  தோரணங்களும் கட்டப்பட இருக்கின்றன.  விழா மேடைக்கு வரும் வழி முழுவதும் வரவேற்பு பதாகைகள் இடம்பெற்ற பெற ஏற்பாடுகள் நடந்து வருகின்றன’’ என்று தெரிவித்திருக்கிறார்.