என் தந்தையை இழந்தேன்; என் நாட்டை இழக்க மாட்டேன் - ராகுல் உருக்கம்
தனது தந்தை ராஜீவ்காந்தியின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்திய பின்னர் ராகுல்காந்தி தனது டுவிட்டரில், வெறுப்பு மற்றும் பிரிவினை அரசியலால் என் தந்தையை இழந்தேன். அதற்காக என் அன்பான நாட்டையும் இழக்க மாட்டேன் என்று உருக்கமுடன் குறிப்பிட்டிருக்கிறார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாரத் ஜோதா யாத்திரா என இந்திய ஒற்றுமை பாதயாத்திரை செல்கிறார். இந்த பாதயாத்திரை தொடக்க விழா இன்று மாலை கன்னியாகுமரியில் நடைபெறுகிறது. மொத்தம் 150 நாட்கள் இந்த பாதயாத்திரை நடைபெறுகிறது. 3570 கிலோ மீட்டர் தூரத்தினை நடந்தே சென்று காஸ்மீர் அடையும் வகையில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.
இந்த பாதயாத்திரையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் நிர்வாகிகள் ,மாநில நிர்வாகிகள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் ஆகியோர் ராகுல் காந்தியுடன் பங்கேற்கிறார்கள். இந்த பாதயாத்திரையை இன்று தொடங்குவதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் ராகுல் காந்தி நேற்று இரவு சென்னை வந்தடைந்தார் .
இன்று காலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் தனது தந்தை ராஜீவ்காந்தி நினைவிடத்திற்கு சென்றார். அங்கு ராஜீவ் காந்தி உருவப்படத்திற்கும் நினைவிடத்திற்கும் மலர் தூவி மரியாதை செலுத்திய பின்னர் , சென்னையில் இருந்து விமான மூலம் திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்றார்.
இதை அடுத்து கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து மூலம் திருவள்ளூர் சிலைக்கு சென்று மரியாதை செலுத்துகிறார். அதன் பின்னர் படகுமூலம் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கும் சென்று மரியாதை செய்து செய்கிறார். பின்னர் காமராஜர் நினைவு மண்டபத்துக்கு சென்று காமராஜர் சிலைக்கு மரியாதை செய்கிறார். மாலை 4 10 மணிக்கு காந்தி மண்டபத்துக்கு சென்று பிரார்த்தனை கூட்டத்தில் பங்கே இருக்கிறார் . பின்னர் பாதயாத்திரை தொடக்க நிகழ்ச்சி தொடங்குகிறது.
இந்த நிலையில் ஸ்ரீபெரும்புதூரில் தந்தையின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்திய பின்னர் தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார் ஒன்று ராகுல் காந்தி. அதில், வெறுப்பு மற்றும் பிரிவினை அரசியலால் என் தந்தையை இழந்தேன். அதற்காக என் அன்பான நாட்டையும் இழக்க மாட்டேன். அன்பு வெறுப்பை வெல்லும். நம்பிக்கை பயத்தை வெல்லும். ஒன்றாக, நாம் வெல்வோம் என்று பதிவிட்டு இருக்கிறார்.