வெட்கம் இல்லாமல் எதை கூறுகிறார்கள் என்று தெரியவில்லை - எல்.முருகன் விளாசல்

 
m

ஜாதிக்கொரு சுடுகாடு வைத்துக் கொள்வது தான் திராவிட மாடலா என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்.  அவர் மேலும், வெட்கமில்லாமல் எதை திராவிட மாடல்  என்று திமுக கூறுகிறார்கள் என தெரியவில்லை என்றும் சொல்லி இருக்கிறார்.

 கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்தாமரை குளத்தில் நடைபெற்ற பாஜக நிர்வாகியின் இல்ல விழாவில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பங்கேற்றார்.  விழாவில் பங்கேற்ற பின்னர் அமைச்சர் எல். முருகனை செய்தியாளர்கள் சந்தித்தனர்.   அவர்களிடம் பேசிய போது,  திராவிட மாடல் குறித்த கேள்வியை செய்கிறார்கள் எழுப்பினர்.  

l

 அதற்கு,    ’’திராவிட  மாடல் என்ன என்பதை திமுக விளக்க வேண்டும். 50,  60 ஆண்டுகளாக திராவிட மாடலில் தான் ஆட்சி நடக்கிறது.   தமிழகத்தில் இன்றைக்கும் பல கோயில்களில் பட்டியலின மக்கள் உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்படுகிறது.   பல கிராமங்களில் பட்டியலின மக்கள் உள்ளே நுழைய முடியவில்லை.  இதுதான் திராவிட மாடலா?  ஜாதிக்கொரு சுடுகாடு வைத்துக் கொள்வது தான் திராவிடம் மாடலா?’’ என்று ஆவேசமாக கேள்வி எழுப்பியவர்,  ‘’ வெட்கமில்லாமல் எதை திராவிட மாடல்  என்று திமுக கூறுகிறார்கள் என தெரியவில்லை’’ என்றார்.

 சமூக நீதியின் ஹீரோ மு. க. ஸ்டாலின் என்று திமுக என்று சொல்லுவது குறித்த கேள்விக்கு,  ‘’ உண்மையான சமூக நீதியின் ஹீரோ பிரதமர் பிரதமர் நரேந்திர மோடி தான்’’ என்றார்.