நான் திமுகவில் இணையவில்லை- தேமுதிக வேட்பாளர் ஆனந்த் பரபரப்பு

 
அ

 நான் திமுகவில் இணையவில்லை. அக்கட்சியில் இணைய போவதாக வரும் தகவல்கள் பொய்யானது என்று தேமுதிக வேட்பாளர்  ஆனந்த் அறிக்கை மூலமாக பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். 

 ஈரோடு கிழக்கு தொகுதிக்கான தேர்தல் 27ம் தேதி நடைபெற இருக்கிறது.   திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் ஈபி கே எஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். தேமுதிக சார்பில் ஆனந்த் என்பவர் போட்டியிடுகிறார் .

அ

இந்த நிலையில் இவர்கள் வேட்பாளர்கள் அந்தந்த கூட்டணியில் தலைவர்களையும் முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆதரவு கேட்டு வருகிறார்.   இந்த நிலையில் தேமுதிக வேட்பாளர் ஆனந்த் திமுகவில் இணையப்போகிறார் என்ற தகவல்கள் கசிந்தன; பரவின.  இதற்கு ஆனந்த் அறிக்கை மூலமாக விளக்கம் அளித்திருக்கிறார்.

 நான் திமுக கட்சியில் இணையப் போவதாக இன்று செய்தி ஒன்று வெளியாகி இருக்கிறது .  நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் ஆதாயம் தேடுவதற்காக இது போன்ற தவறான செய்தி பரப்பி என் மீது ஈரோடு மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை குறைக்கின்ற  எண்ணத்துடன் ஆளும் கட்சியும்,  ஆண்ட கட்சியும் செயல்படுகின்றதோ என்கிற சந்தேகம் எழுந்திருக்கிறது .  இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிடும் தேமுதிகவுக்கு களங்கம் வரும் வகையில் இது போல் உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடுவதை வன்மையாக கண்டிக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

இது போன்ற வதந்திகளுக்கு எல்லாம் செவி சாய்க்காத எனது ஈரோட்டு மக்கள் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் தேமுதிகவிற்கு  ஆதரவு அளித்து வாக்களித்து மாபெரும் வெற்றி அடையச் செய்வார்கள் என்று மனப்பூர்வமாக நம்புகிறேன் என்று கூறியிருக்கிறார்.

 தேமுதிகவிற்கு சமூக வாக்களித்து மாபெரும் வெற்றி அடைய செய்வார்கள் என்று மனப்பூர்வமாக நம்புகிறேன் . தேமுதிக மாநகர் மாவட்ட செயலாளராகிய நான் தற்போதும்  எப்போதும் கேப்டன் அண்ணியார் அவர்களுடன் தான் பயணிப்பேன் என்பதை இந்த அறிவிப்பின் மூலம் உறுதி பெற தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்.