புரட்சிப் பயணம் துவங்குறேன் - ஓபிஎஸ் அறிவிப்பு

 
o

 எடப்பாடி பழனிச்சாமி அணியில் இருக்கும் பலர் ஓபிஎஸ் அணி தாவி வருகிறார்கள்.   உசிலம்பட்டி எம்எல்ஏவும் எடப்பாடியின் தீவிர ஆதரவாளருமான ஐயப்பன் நேற்று இரவில் சென்னையில் ஓபிஎஸ்சை சந்தித்து தன்னை அவரது அணியில் இணைத்துக் கொண்டார்.  

ஒ

 ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு தெரிவித்த அவர் அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது,   கட்சி ஒன்றாக இணைய வேண்டும் பிரிந்த அனைவரும் ஒன்றாக இணைவோம் என்று தனக்கு ஏற்பட்ட அவமானங்களை எல்லாம் தாங்கிக் கொண்டு பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்திருக்கிறார்.   ராமருக்கு பாலம் கட்ட அணில் உதவியது போல் நானும் ஓபிஎஸ் முயற்சிக்கு பாடுபடுவேன்.   என்னை போல் இன்னும் எம்எல்ஏக்கள் ஓபிஎஸ் பக்கம் வருவார்கள் என்றார்.

 இயக்குநர் கே. பாக்யராஜ் ஓபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார்.  மேலும், பிரிந்தவர்கள் அனைவரையும் ஒன்று சேர்க்க நானே பேச்சு நடத்துவேன்  என்கிறார்.

ச்

 ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு இப்படி கூடிக் கொண்டிருக்கும் நிலையில் இது குறித்து ஓபிஎஸ் செய்தியாளர்களிடம் பேசிய போது,  எம்ஜிஆர் மறைவுக்கு பின்னால் ஜானகி அணி, ஜெயலலிதா அணி என்று இரண்டாக பிரிந்து தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்ததால் தேர்தல் முடிவுக்கு பின்னர் தலைவர்கள் இணைவதற்கு முன்பாகவே தொண்டர்கள் இணைந்தார்கள்.    தற்போதும் அதுதான் நடக்கிறது என்றார்.

 அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்து வருகிறது.   இந்த கோரிக்கையை வலியுறுத்தி இணைப்பை வழியுறுத்தி மாவட்டம் தோறும் புரட்சிப் பயணத்தை துவங்க இருக்கின்றேன்.   எம்எல்ஏக்கள் உறுதியாக இந்த பக்கம் வருவார்கள் இணைந்து செயல்படுவார்கள்.  கட்சி ஒன்று பட வேண்டும் என்கிற குறிக்கோளோடு கட்சிக்கு உறுதுணையாக இருந்தவர்கள் என்பதால் சசிகலா,  தினகரனையும் பயணத்தில் ந்தித்து ஆதரவு கேட்பேன் என்று சொல்லி இருக்கிறார்.