நான் அரசியலை விட்டே விலகுகிறேன் - எச்.ராஜாவை டென்ஷனாக்கிய அமைச்சர் பெரியகருப்பன்

 
r

பிரதமர் நரேந்திர மோடி குறித்து கடந்த எட்டு ஆண்டுகளாக எதிர்க்கட்சியினர் ஒரு கேள்வியை தொடர்ந்து எழுப்பி வருகின்றனர்.  அதாவது 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பாக நரேந்திரமோடி பேரணி ஒன்றில் பேசியதாக அவர்கள் சொல்லி வருகின்றனர்.  சுவிஸ் வங்கிகளில் இந்திய பணமுதலைகள் பதுக்கி வைத்திருக்கும் கருப்பு பண விவகாரம் தான் அது. 

 சுவிஸ் வங்கிகளில் இருக்கும் கருப்பு பணத்தை மீட்டு அதை ஏழை வங்கி கணக்குகளில் 15 லட்சம் ரூபாய் போடுவதாக சொன்னீர்களே? அது என்னவாயிற்று? அந்த வாக்குறுதியை எப்போது நிறைவேற்றுவீர்கள்? என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்புகின்றனர்.  

 மத்திய அமைச்சர்கள் அமித் ஷாவும்,  ராஜ்நாத் சிங்கும் பிரதமர் மோடி அப்படி எந்த இடத்திலும் சொல்லவே இல்லை என்று தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.  ஆனாலும் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அந்த கேள்வியை கேட்டுக் கொண்டே வருகிறார்கள்.  

p

 இந்த நிலையில் தற்போது தமிழகத்திலும் இது மீண்டும் பேசுபொருளாகி இருக்கிறது.  அமைச்சர் பெரியகருப்பன் இந்த விவகாரத்தை பேசியிருக்கிறார். இது குறித்து பாஜக மூத்த தலைவர் எச். ராஜா சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசியபோது,   நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் செலுத்துவோம் என்று பிரதமர் சொன்னதாக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் பேசியிருக்கிறார்.  அவர் பிரதமர் சொன்னதை சரியாக புரிந்து கொள்ளவில்லை .  வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தை எடுத்தால் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கில் 15 லட்சம் ரூபாய் செலுத்த முடியும் என்றுதான் சொன்னார். 

ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுகிறேன் என்று அவர் சொல்லவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.

 தொடர்ந்து அதுகுறித்து பேசியபோது,   ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுகிறேன் என்று பிரதமர் சொன்னதாக அமைச்சர் நிரூபித்தால் நான் அரசியலை விட்டே வெளியேறுகிறேன்.  அப்படி நிரூபிக்க வில்லை என்றால் பெரியகருப்பன் அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும்.  அவ்வாறு செய்யாவிட்டால் அவரது வீட்டின் முன்பாக நின்று நாங்கள் போராட வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று ஆவேசமாக தெரிவித்திருக்கிறார் .

mo

பாஜகவின் தேசிய செயலாளராக இருந்த எச்.  ராஜா இந்த அளவுக்கு உறுதியாகச் சொல்கிறார் என்றால்,  அப்படியானால் மோடி அவ்வாறு சொல்லவில்லை என்று தான் அர்த்தம் என்று சலசலப்பு எழுந்திருக்கிறது.  அப்படியானால் மோடி என்னதான் பேசினார் என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

 அதற்கு,   சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கான்கெர் நகரில் நடந்த பாஜக பேரணியில் நரேந்திர மோடி பேசியபோது,  நமது பண முதலைகள் வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் கருப்பு பணத்தை மீட்டு வந்தால் அதை இங்குள்ள ஏழை மக்கள் ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் ரூபாய் வழங்கிட முடியும் .  அந்த அளவிற்கு வெளிநாடுகளில் இந்தியர்களின் கருப்பு பணம் குவிந்து கிடக்கிறது என்று தான் சொன்னார்.   நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொரு இந்தியருக்கும் 15 லட்சம் ரூபாயை வங்கி கணக்கில் செலுத்துவேன் என்று ஒருபோதும் மோடி சொல்லவே இல்லை என்று பாஜகவினர் சொல்லி வருகின்றனர்.