நான் அடியாள் நீ பைத்தியம் : சூர்யா சிவா- காயத்ரி ரகுராம் கடும் மோதல்

 
sக்

 அண்ணாமலையின் அடியாள் என்று திருச்சி சூர்யாவை காயத்ரி ரகுராம் சொல்லி இருப்பதற்கு,   நான் அடியாள்தான்  நீ பைத்தியம் என்று பதில் அளித்து இருக்கிறார் சூர்யாசிவா.

கட்சியை விட்டு வெளியேறிய பின்னரும் கூட அண்ணாமலையுடனான மோதலை தொடர்ந்து கொண்டிருக்கிறார் காயத்ரி ரகுராம்.   தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் அந்த தேர்தலில் அண்ணாமலையை எதிர்த்து தான் போட்டியிடப் போவதாகவும் சவால் விடுத்திருந்தார் காயத்ரி ரகுராம்.

அக்

 இதற்கு அண்ணாமலையின் ஆதரவாளர் திருச்சி சூர்யா சிவா பதிலடி கொடுத்திருக்கிறார். நீ கூப்பிடுற இடத்துக்கெல்லாம் வரத்துக்கு அவரை என்னன்னு நினைச்சீங்க? தைரியம் இருந்தால் அண்ணன்  சவுக்கு சங்கர் மாதிரி உதயநிதியை எதிர்த்து நிற்பேன் என்று சொல்லு.   இல்லை என்றால் நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் முருகனை எதிர்த்து நிற்பேன் என்று சொல்லு.  அதை விட்டுவிட்டு தேர்தலில் நிற்க விருப்பம் இல்லாதவரை வாருங்கள் நாம் தேர்தலில் போட்டியிடலாம் என்று சொல்வது சரியா?என்று கேட்டிருந்தார். மேலும்,  உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் உங்களிடம் நேரடியாக சந்திக்க நான் தயாராக இருக்கிறேன்.  உங்களுக்கு திராணி தைரியம் இருந்தால் ஒரு தனியார் தொலைக்காட்சியில் விவாதத்தை வைத்துக் கொள்ளலாம்.   நாம் இருவரும் நேரடியாக சந்திக்க?நான் தயார்.. நீங்கள் தயாரா? முதலில் என்கிட்ட வா மா’’என்று அழைப்பு விடுத்திருந்தார்.

உடனே காயத்ரி ரகுராம்,  ’’அண்ணாமலைக்கு இப்போது என்னுடன் பேசத் தைரியம் இல்லை, ராஜினாமா செய்த அடி ஆளை அனுப்புகிறார். ஈரோடு இடைத்தேர்தலில் எனக்கு எதிராக அவர் போட்டியிட முடியுமா அல்லது முடியாதா என்று கேளு. இது ஆம் அல்லது இல்லை என்ற கேள்வி. விவாதிக்க எதுவும் இல்லை.

இது காரியகர்த்தாவை சீர்ப்படுத்துதல் என்று அழைக்கப்படுகிறது. இப்படித்தான் அண்ணாமலை தேசிய அரசியல் கட்சியில் காரியகர்த்தாவை கட்சிக்கு பயனுள்ளதாக மாற்றுவதற்கு பதிலாக தனது சுயநலத்திற்காக ஒரு காரியகர்த்தாவை அடி ஆளாக மாறுகிறார்.  வார்ரூம் ஜோக்கர்கள், கேசவவிநாயகம் ஜி மற்றும் அமைச்சர் எல்.முருகன் ஜியை தாக்க அண்ணாமலை கொடுத்த அடி ஆளு வேலையை முதலில் செய்யுங்கள்.

அச்

இந்த காமெடி பீஸ் தலைவருக்கு அல்லது விமானக் கதவைத் திறந்த ஆபத்தான பீஸ் தலைவருக்கு ஒரு அடி ஆளு தேவையா? மற்றவர்களுக்குத் தொல்லை கொடுக்க அடி ஆளு அனுப்பும்படி கர்நாடகத் தந்தை தனது வாரிசுக்கு அறிவுரை கூறுகிறாரா? கர்நாடக இரட்டை ஆண் குழந்தைகள் பயணிகளை (இந்தியாவை) விமானக் கதவைத் திறந்து ஆபத்தில் ஆழ்த்துவதற்காக சேட்டை செய்யும் குழந்தைகளை கர்நாடக தந்தை தண்டிக்க வேண்டும். அவர்களை காப்பாற்ற வேண்டாம். எல்லா சாமானியர்களையும் போல அவர்களையும் கைது செய்து விசாரிக்க வேண்டும். அவர்களை விமானத்தில் அனுமதிக்கக் கூடாது’’கடுமையாக கூறியிருக்கிறார்.

இதற்கு சூர்யாசிவா,  ‘’நான் ராஜினாமா செய்த அடியாள் என்றால் நீ டிஸ்மிஸ் செய்யப்பட்ட பைத்தியம். நீ போய் நிற்கிற இடத்தில் எல்லாம் அவரும் வந்து நிற்பாரா? நீ தான் என் கேள்விகளுக்கு பதில் இருக்கிறதா? என்னை நேரில் சந்திக்க யாருக்கு தைரியம் இருக்கிறதா? என்று ஒரு பேட்டியில் கேட்ட? எனக்கு இருக்கிறது தங்களுக்கு?’’ என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.