நான் தான் பெரிய ஆள்... மனம் விட்டு பேசிய மோடி

 
m

எட்டு ஆண்டுகளில் பலமுறை தமிழக வந்திருக்கிறேன்.   சமீபகாலமாக தமிழகம் மக்களிடம் பெரும் மாற்றத்தை பார்க்கிறேன் .  ‘கோ பேக்’கையும் பார்த்துவிட்டேன்;  ‘கம் பேக்’கையும் பார்த்துவிட்டேன்.  தமிழக மக்கள் உள்ளப்பூரிப்புடன் என்னை வரவேற்றார்கள்.  அந்த மக்களுக்கு நேரம் பார்க்காமல் சேவை செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக நிர்வாகிகளிடம் மனம்  விட்டுப் பேசி இருக்கிறார் பிரதமர் மோடி.

vv

 செஸ் ஒலிம்பியாட் போட்டியை துவங்கி வைப்பதற்காக நேற்று முன்தினம் 28ஆம் தேதி அன்று மாலையில் சென்னை வந்த பிரதமர் மோடி,  நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடந்த செஸ் ஒலிம்பியாட் போட்டி நிகழ்ச்சியை தொடங்கி வைத்த பின்னர் உள்ள ஆளுநர் மாளிகை சென்று தங்கினார் .  இரவு 10 மணியளவில் தமிழக பாஜக நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.   பத்து மணி முதல் 11. 15 மணி வரைக்கும் அவர்களுடன் பேசி இருக்கிறார்.  

cc

 எட்டு ஆண்டுகால பாஜக அரசை மக்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பது குறித்து கேட்டறிந்திருக்கிறார் பாஜக நிர்வாகிகளிடம்.   அவர் பேசியபோது ,  தமிழகத்தில் கோ  பேக் மோடி என்று சொன்னதையும் பார்த்துவிட்டேன்.   கம் பேக் மோடி என்பதையும் பார்த்து விட்டேன்.   தமிழக மக்கள் உள்ளப்பூரிப்புடன் என்னை வரவேற்றார்கள். அந்த மக்களுக்கு நேரம் பார்க்காமல் சேவை செய்ய வேண்டும் என்று சொன்னவர்,    கட்சியில் பலரும் புதிதாக இணைகின்றனர்.  அப்படி கட்சியில் இணைந்ததும் நான்தான் பெரிய ஆள் என்று கருதக்கூடாது.   கட்சியில்உள்ள சீனர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் அவர்கள் புதிதாக சேர்ந்தவர்களுக்கு உரிய மரியாதை கொடுத்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறார்.

xx

 திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது பிரதமரின் சென்னை பயணத்திற்கு ‘மோடியே திரும்பி போ’ என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் டிரெண்டு செய்ததோடு மட்டுமல்லாமல் திமுகவிரும் அதன் கூட்டணி கட்சியினரும் கருப்பு பலூன்களை பறக்க விட்டு கடும் எதிர்ப்பை காட்டினர்.   ஆளுங்கட்சி ஆகிவிட்ட பின்னர் கடந்த முறை பிரதமர் சென்னை வந்த போது திமுகவின் நிலை என்ன என்று பரபரப்பாக பேசியிருந்தது.  

திமுக எதுவும் செய்யவில்லை.  அதன் கூட்டணி கட்சிகள் பிரதமருக்கு எதிராக கருப்பு கொடி காட்ட திட்டமிட்டு இருந்தனர் .  ஆனால் அவர்களுக்கெல்லாம் திமுகவின் தலைமையிடம் இருந்து ஒரு அறிவிப்பு  போனது .  பிரதமரின் சென்னை வருகைக்கு எதிர்ப்பு காட்ட வேண்டாம்.   அப்படி எதிர்ப்பு காட்ட வேண்டும் என்று நினைத்தால் போராட்டத்தை  சென்னைக்குள் வைத்துக் கொள்ள வேண்டாம்,  சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் போராட்டங்கள் நடத்திக் கொள்ளுங்கள் என்று வாய் மொழியாக உத்தரவிடப்பட்டது.  

mc

 தற்போது மோடியின் சென்னை பயணத்தின் போதும் கோ பேக் மோடி , வணக்கம் மோடி இரண்டுமே டிவிட்டரில் டிரெண்டகி வந்த.  இதில் கோ பேக் மோடி கடந்த சில தினம் மோடி சென்னைக்கு வருவதற்கு முன்பாகவே ட்விட்டரில் இந்திய அளவில் டிரெண்ட் ஆகி வந்தது.  ’ வணக்கம் மோடி’ பிரதமர் சென்னைக்கு வந்த தினத்தில் ட்ரெண்ட் ஆகியது.   ஆனாலும் பிரதமரின் சென்னை பயணத்தில் முன்னை விடவும் கட்சியினரும் பொது மக்களும் சாலைகளில் திரண்டு நின்று அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.   இது  பிரதமர் மோடிக்கு மன நிறைவை தந்திருக்கிறது .

mo

 கடந்த முறை பல்வேறு திட்ட பணிகளுக்காக  சென்னை வந்த மோடி பயணத்தில் விழா மேடையில் முதல்வர் மு. க ஸ்டாலின் பேசியது பெரும் சர்ச்சையையும் பாஜகவினருக்கு மன வருத்தத்தையும் ஏற்படுத்தி இருந்தன.   ஆனால் இந்த முறை முதல்வரும் பிரதமரும் ஒருவரை ஒருவர் கைகளைப் பிடித்துக் கொண்டு நெருங்கி சிரித்து சிரித்து பேசியது பாஜகவை நெகிழ வைத்திருக்கிறது.

எட்டு ஆண்டுகளில் பலமுறை தமிழக வந்திருக்கிறேன்.   சமீபகாலமாக தமிழக மக்களிடம் பெரும் மாற்றத்தை பார்க்கிறேன்.  அவர்கள் பாஜகவை ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கின்றார்கள் . அதை உணர்ந்து கட்சி பணிகளை துரிதப் படுத்துங்கள் என்று சொல்லி இருக்கிறார் மோடி.