ஓ.பன்னீர்செல்வம் எனும் நான்... அதிமுக மாஜி எம்.பியின் உறுதி
முதல்வர் மு. க. ஸ்டாலின், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இருவரும் கூட்டு வைத்திருப்பதால் கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருக்கின்றனர் என்கிறார் அதிமுகவின் முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணன்.
ஓபிஎஸ் அணியின் மதுரை மாநகர் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் தனது ஆதரவாளர்களுடன் பேரணியாக சென்று மதுரையில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்கள் இடம் பேசியபோது, ’’அதிமுகவில் ஓபிஎஸ்க்கு தான் தொண்டர் படை அதிகம் உள்ளனர் . தொண்டர் படையின் எழுச்சியோடு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்வதற்கு ஓபிஎஸ் தயாராகிவிட்டார். அதிமுக வழிநடத்த சரியான தலைவர் ஓபிஎஸ் மட்டுமே’’என்றார்.
மேலும், 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ‘ ஓ. பன்னீர்செல்வம் எனும் நான்...’ என்கிற குரல் ஒலிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். அவர் மேலும் , ’’ஓபிஎஸ் தலைமை ஏற்பதற்காக சத்திய சபதம் எடுப்போம்’’என்றார்.
மேலும் பேசிய போது, ’’முதல்வர் மு. க. ஸ்டாலினும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டு வைத்துக் கொண்டிருக்கிறார்கள். எடப்பாடி அணியினரும் முதல்வர் ஸ்டாலினுடன் நெருக்கம் காட்டி வருகின்றார்கள். இதனால்தான் கொடநாடு கொலை வழக்கில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருக்கின்றார்கள் என்று குற்றம் சாட்டினார். ஊழல் செய்த அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எஸ்பி வேலுமணி உள்ளிட்டோர் கம்பி என்ன போகிறார்கள் என்று அவர் அதிரடியாக தெரிவித்திருக்கிறார்.