2024 மக்களவை தேர்தலில் போட்டியிட விரும்பும் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா

 
ராபர்ட் வத்ரா

பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா, 2024 மக்களவை தேர்தலில் மொராதாபாத் தொகுதியில் போட்டியிட விரும்புவதாக தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவரும், பிரபலமான தொழிலதிபருமான ராபர்ட் வதேரா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: மக்கள் என்னிடம் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். நான் நாடாளுமன்றம் செல்வதற்கு மொராதாபாத் அல்லது உத்தர பிரதேசத்தில் உள்ள வேற நகரத்தை நான் தேர்வு செய்வேன் என்று எதிர்பார்க்கின்றன. தேர்தல் அல்லது தேர்தல் இல்லை, நான் நாடு முழுவதும் உள்ள கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் குருத்வாராக்களுக்கு செல்வேன். அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று நினைக்கிறேன். மக்களின் வாழ்க்கை சிறப்பாக மாற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். 

பிரியங்கா, ராகுல்,சோனியா

பிரியங்கா வீட்டுக்கு வந்ததும், நாங்கள் அரசியல் பேசுவோம், மேலும் கிராமங்களில் உள்ள மக்களின் துன்பங்களை எவ்வாறு குறைப்பது என்று விவாதிக்கிறோம். பிரியங்கா காந்தி உத்தர பிரதேசத்தை வழிநடத்துவதை மக்கள் பார்க்க விரும்புகிறார்கள். ஆனால் அது அவருடைய (பிரியங்கா காந்தி) முடிவாக இருக்கும்.  பிரியங்கா காந்தி ஒரு தேசிய தலைவர் என்பதால், உத்தர பிரதேசத்தில் மட்டும் இருக்க விரும்புகிறாரா அல்லது தேசிய தளத்துக்கு செல்வாரா என்பதை பிரியங்கா தான் முடிவு செய்ய வேண்டும். 

பிரதமர் மோடி

ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் எந்த பதவியையும் நினைக்க மாட்டார்கள். அரசியல் அவர்களின் இரத்தத்தில் இருப்பதால், அவர்கள் எல்லா இடங்களிலும் மக்களுக்காக கடினமாக உழைக்கிறார்கள். உத்தர பிரதேச தேர்தலில் காங்கிரஸ் சிறப்பாக செயல்படும். நாங்கள் இரட்டை இலக்க எண்ணிக்கையை பார்க்கிறோம், மக்களுக்கு நல்லாட்சியை யார் கொடுப்பார்களோ அவர்களுக்கு ஆதரவளிப்போம். அதிகரித்து வரும் பணவீக்கம் மக்களின் வாழ்க்கையை பரிதாபகரமானதாக ஆக்கியுள்ளது. இரண்டாவது கோவிட்-19 அலையின்போது மோடி அரசு மருத்துவமனைகளுக்கு பணத்தை செலவழித்திருக்க வேண்டும் ஆனால் சென்ட்ரல் விஸ்டா மற்றும் பிற திட்டங்களில் கவனம் செலுத்தியது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.