22/6 நள்ளிரவு பரபர... எப்படி சாத்தியம்?பின்னணி இதுதானா?

 
pi

ஆவடி காவல் ஆணையர் கைவிரிக்க, ஐகோர்ட் தனி நீதிபதியும் கைவிரிக்க அவ்வளவுதான் ஓபிஎஸ் அரசியல் சகாப்தம் முடிந்துவிட்டது என்று அதிமுகவினர்  எல்லோரும் நினைத்திருந்த வேளையில் தடாலடியாக இரவு 11 மணிக்கு மேல்முறையீடு செய்து விடிய விடிய வாதம் செய்ததில் அதிகாலையில்  ஓபிஎஸ்-க்கு சாதகமான தீர்ப்பு வந்தது.  அதற்கு பின்னணியில் டெல்லி இருப்பதாக சொல்கிறார் அதிமுகவின் முன்னாள் ஐடி விங் நிர்வாகி அஸ்பயர் சுவாமிநாதன்.

o
 
 அதிமுகவில் ஒற்றைத் தலைமை பதவி விவகாரத்தால் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி இருவருக்குமிடையே கடும் மோதல் ஏற்பட்டு அது உச்சகட்டத்திற்கு சென்றது.   இதனால் மாநில நிர்வாகிகள், அணி நிர்வாகிகள் என்று கட்சியின் 95 சதவிகிதம் பேர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.   இதைக் கண்டு கொதித்து எழுந்த ஓபிஎஸ்  நடக்கவிருந்த பொதுக்குழுவை ஒத்திவைக்க வேண்டும் என்று எடப்பாடிக்கு கடிதம் எழுதினார்.   அதை ஏற்காத எடப்பாடி,   திட்டமிட்டபடி பொதுக்குழு நடக்கும் என்று பதில் அனுப்பியிருந்தார். இதை அடுத்து மீண்டும் ஒரு அஸ்திரத்தை எடுத்தார் ஓபிஎஸ்.  சென்னை வானகரத்தில்  நடக்கவிருக்கும் பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி அளிக்க கூடாது என்று ஆவடி காவல் ஆணையருக்கு மனு அளித்திருந்தார்.  ஆனால் ஆவடி காவல் ஆணையரோ, இந்த பொதுக்குழு கூட்டம் தனியார் இடத்தில் நடைபெறுகிறது . அதுவும் அரங்கத்திற்கு உள்ளே நடைபெறுகிறது.   அதனால் அதற்கு தடை விதிக்க முடியாது என்று ஓபிஎஸ்-ன் கோரிக்கையை நிராகரித்தார். 
 
இதனால்  அதிமுக பொதுக்குழுவுக்கு  தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில்  ஓபிஎஸ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.   மதியம் 3 மணிக்கு மேல் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.    இரு தரப்பு வாதம் முடிந்த பின்னர் தனி நீதிபடி கிருஷ்ணன் ராமசாமி,   அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க முடியாது என்று ஓபிஎஸ் தரப்பின் கோரிக்கையை நிராகரித்தார்.  அவ்வளவுதான் ஓபிஎஸ் அரசியல் சகாப்தம் முடிந்துவிட்டது என்று அதிமுகவினர் நினைத்திருந்த நிலையில் தடாலடியாக இரவு 11 மணிக்கு ஓபிஎஸ் தரப்பில்  தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியின் உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டது.  அதிமுகவின் பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் அந்த மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார்.   நீதிபதிகள் துரைசாமி,  சுந்தர் மோகன் ஆகிய நீதிபதிகள் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டனர்.

hr
 
 பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டுமென்று ஓபிஎஸ் தரப்பும்,  பொதுக்குழுவை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பும் விடிய விடிய வாதம் செய்தனர்.   இந்த வாதம் அதிகாலை 4 மணிக்கு முடிவடைந்தது.   இதையடுத்து  நீதிபதிகள் 4.20க்கு தீர்ப்பளித்தனர்.   இந்த தீர்ப்பு ஓபிஎஸ்க்கு சாதகமாக அமைந்தது.  அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பான  ஓபிஎஸ் கோரிக்கையை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர்.    அதிமுக பொதுக்கூட்டம் நடத்த எந்த தடையும் இல்லை. அதே நேரம் பொதுக் குழுவில் 23 தீர்மானங்கள் ஆலோசித்து முடிவு எடுக்கலாம்.  ஆனால் இருபத்தி மூன்று தீர்மானங்களை தவிர வேறு புதிய தீர்மானங்கள் எதுவும் முடிவு எடுக்க கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.   இந்தத் தீர்ப்பினால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்  கொண்டாடித் தீர்த்தனர்.   

ச்ந்

இந்த வழக்கை இரவு 11 மணிக்கு மேல் எடுத்துக் கொண்டு எப்படி முக்கியத்துவம் கொடுத்து விசாரணை நடந்தது.  விடிய விடிய எப்படி விசாரணை நடந்தது என்று கேள்விகள் எழுந்திருக்கின்றன.   இதுகுறித்து அதிமுக முன்னாள் ஐடி விங் நிர்வாகி அஸ்பயர் சுவாமிநாதன் ,   இரவு 11 மணிக்கு மேல் டெல்லியில் இருந்து அழைப்பு வந்திருக்கிறது.   அப்போது எங்கள் ஆதரவு என்றைக்கும் உங்களுக்கு இருக்கிறது என்று டெல்லி  சொல்லியிருக்கிறது .  டெல்லியின் ஆதரவு இல்லை என்றால் அவசர அவசரமாக பதினோரு மணிக்கு ஒரு வழக்கை எடுத்து அதிகாலையில் அந்த வழக்கில் தீர்ப்பு கொடுக்கின்ற அளவிற்கு இது ஒன்றும் முக்கியமான வழக்கு அல்ல . இதில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் டெல்லி ஓபிஎஸ்- இபிஎஸ் இருவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் . அதிமுக வலுவாக இருந்தால்தான் பாஜக வாழ முடியும் என்று உணர்ந்துள்ளது மட்டும் தெரிகிறது.  பாஜகவின் ஆதரவு ஓபிஎஸ்க்கு உள்ளது.  அதில் எந்த சந்தேகமும் இல்லை என்கிறார்.