விஜயகாந்த் எப்படி இருக்கிறார்?

 
ca

தேமுதிக தலைவர் விஜயகாந்த் எப்படி இருக்கிறார்?  என்ற கேள்விக்கு அவரது மகன் விஜய பிரபாகரன் பதில் அளித்துள்ளார். 

 சென்னை கோவிலம்பாக்கத்தில் கட்சி நிர்வாகி சுப நிகழ்ச்சியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரபாகரன் கலந்து கொண்டார்.  இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது,     பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

 திமுக ஆட்சியை குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.   திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவு பெற்று விட்டதே என்று அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு, ஓராண்டு கால திமுகவின் ஆட்சியில் மின்வெட்டு அதிகமாக இருக்கிறது.   ஆனால் அதிமுக ஆட்சியில் மின்வெட்டு இல்லாமல் இருந்தது.   திமுக ஆட்சிக்கு வந்ததும் ஆரம்பத்தில் நன்றாக இருந்தாலும் போகப்போக கோட்டை விடுகிறார்கள் என்று தொடர்ந்தார்.

vp

 அது குறித்து பேசியபோது,   திமுக சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக இருக்கிறது.   அதிமுகவினர் குற்றம் சாட்டுவது போல் தான் திமுகவும் போட்டோ அரசியல்தான் செய்து கொண்டு இருக்கிறது.   ஒரு இடத்திற்கு போய் டீ குடிப்பது உணவு உண்பது என்று தான் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று விமர்சித்தார் .

தேர்தல் வாக்குறுதியை அவர்கள் நிறைவேற்றவே இல்லை.  ஆனால் நிறைவேற்றுவது போல் செய்வது போல் ஒரு மாயையை தான் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று அவர் தெரிவித்தார்.

 தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை குறித்த கேள்விக்கு,   கேப்டன் நன்றாக இருக்கிறார். முன்பை விடவும் சிறப்பாக இருக்கிறார் என்று தெரிவித்தார்.