இவ்வளவு மோசமான மனிதரை நாட்டில் வைப்பது எப்படி? நயினார் நாகேந்திரன் ஆவேசம்

 
n

 இந்து பெண்கள் மட்டுமல்லாது அனைத்து பெண்களும் ஆ.ராசா பேசிய கருத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்கள்.  இவ்வளவு மோசமான மனிதரை நாட்டில் வைப்பது எப்படி என்கிற அடிப்படையில் தான் அனைத்து காவல் நிலையங்களிலும் ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்திருக்கிறோம் என்கிறார் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன்.

ar

 உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்கிற திட்டத்தின் கீழ்,  நெல்லை மாவட்ட ஆட்சியரிடம்,  நெல்லை சட்டமன்ற தொகுதி தொடர்பான கோரிக்கைகளை மனுவாக அளித்தார் அத்தொகுதியின் எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன்.   இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் சந்தித்தபோது,   இந்து மதத்திற்கு எதிராக , அவதூறாக , தரக்குறைவாக திமுக எம். பி. ஆ. ராசா பேசியது குறித்த கேள்விக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா சொன்ன கருத்துக்கு அனைத்து தரப்பினரும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றார்கள்.

 இந்து பெண்கள் மட்டுமல்லாமல் அனைத்து பெண்களும் ஆ. ராசா பேசிய கருத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்கள்.  இவ்வளவு மோசமான ஒரு மனிதரை நாட்டில் எப்படி வைப்பது? என்கிற அடிப்படையில் தான் அனைத்து காவல் நிலையங்களிலும் ஆ.  ராசா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்துள்ளோம் என்கிறார்.  அவர் மேலும் ,   அனைத்து பெண்களையும் கேவலமாக பேசிய கருத்தாக இதனை எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும் என்கிறார்.

 தொடர்ந்து ஆ.ராசா குறித்து அவர்,   வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் ஆ. ராசாவின் கருத்துக்கு தக்க பதிலடி கிடைக்கும்.  ஆ. ராசா பேசிய கருத்தை எடுத்துரைத்து பாராளுமன்றத்திலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்றார்.    மாநில காவல்துறையை தன் கையில் வைத்திருக்கும் ஆளுங்கட்சி. ராசா மீது கொடுக்கப்பட்ட புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.    ஆனால்,  அவர்கள் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். அவர்கள் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள்  என்பதால் பொதுமக்கள் தான் இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.