‘’நீ எல்லாம் எப்படி MPஆன? ’’ -கேள்விக்கு சமாளித்த செந்தில்குமார்

 
s

திமுகவின் தற்போதைய ஆட்சியில் மத்திய அரசு என்பதை ஒன்றிய அரசு என்று சொல்லிவருகின்றனர்.  இதற்கு பாஜகவினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  

இந்நிலையில், சேப்பாக்கம் திருவல்லிக்கேணியின் எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்றுக்கொண்டபோது, மத்திய அரசு என்று சொல்லவில்லை; ஒன்றிய அரசும் என்றும் சொல்லவில்லை. இந்திய அரசு என்று குறிப்பிட்டார்.

s

இதற்கு தமிழக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி,  'உதயநிதி ஸ்டாலின் எனும் நான்' என்று அமைச்சராக உறுதி மொழி ஏற்று கொண்டவர் "ஒன்றிய அரசின்" சார்பாக என்று எந்த இடத்திலும் கூறாமல், இந்திய அரசு என்று உறுதி மொழி ஏற்று கொண்டது ஏன்? ஓ!! அப்படி குறிப்பிட்டிருந்தால் அமைச்சராகியிருக்க முடியாது அல்லது தகுதி இழக்க நேரிடும் என்று தெரியுமோ?என்று குறிப்பிட்டிருந்தார்.

உடனே திமுக எம்பி செந்தில்குமார், ‘’பாஜக வில் யாருக்குமே அறிவு இருக்காதா? சரி மூன்றாம் வகுப்பு class எடுப்போம்.  நாட்டின் பெயர்-இந்தியா
மாநிலத்தின் பெயர்-தமிழ் நாடு.   Union Govt-ஒன்றிய அரசு.  State Govt-மாநில அரசு Mr.நாராயணா நாட்டின் பெயரால் தான் பதவி ஏற்ப்பு

புறியுதோ..சரி, இப்போ திரும்ப சொல்லுங்க பார்க்கலாம் என்று விமர்சித்திருந்தார்.

dr

இதற்கு நாராயணன் ,  'ஏற்ப்பு' அல்ல ஏற்பு! 'புறியுதோ' அல்ல புரியுதோ! என்ன செய்வது!! ஆங்கிலேயே அடிவருடிகள், 'Google Translate' மூலம் தமிழ் கற்று கொண்டால் தமிழ் அறிவு வளராது தான். மீண்டும் ஒன்றாம் வகுப்பு முதல் படித்து விட்டு வரவும். Union என்றால் என்ன? State என்றால் என்னவென்று கற்றுத் தருகிறேன் என்கிறார்.

இந்த விவகாரத்தில் டுவிட்டரில் ஒருவர்,  தமிழ்ல ஒழுங்கா எழுது.  முதலில் பிறகு பாஜகவ பத்தி பேசலாம்.  நீ எல்லாம் எப்படி MPஆன? என்ற கேள்விக்கு, ‘’மக்கள் ஓட்டு போட்டு’’ என்று  பதிலடி கொடுத்திருக்கிறார்.

 தமிழில் தவறாக எழுதியது குறித்த விவகாரத்தில் ,  நான் ஆங்கிலத்தில் படித்த போதும் தமிழில் சொந்தமாக கருத்துக்களை எழுதி பதிவிட்டு வருகிறேன்.  இதனால் சில வார்த்தைகளில் தவறு வருவது இயல்பு.  தமிழைத் தவறி என்று எழுத முயன்ற வருகிறேன் நான் எழுதும் தமிழில் குற்றம் கண்டுபிடித்திருக்கும் நாராயணன் திருப்பதி எழுதிய தமிழ் வார்த்தைகளிலும் சில தவறுகள் உள்ளன இது அவருக்கும் தெரியும் என்று சமாளித்திருக்கிறார்