உதயநிதி எப்படி கடவுள் ஆனார்? பதில் சொல்ல மறுத்த மேயர்

 
ர

உதயநிதி ஸ்டாலின் எங்கள் கடவுள் என்று சொன்ன மேயர் சண் ராமநாதன், கடவுள் மறுப்பு கொள்கையுடைய திமுகவின் இளைஞரணி செயலாளர் எப்படி கடவுள் ஆனார்? என்ற கேள்விக்கு  பதில் சொல்ல மறுத்திருக்கிறார்.

 தஞ்சை மேயர் சண் ராமநாதன் உதயநிதி காலில் விழுந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.   இதுதான் சுயமரியாதையா? இதுதான் திராவிட மாடலா?  என்று உன்னால் அமைச்சர் உதயகுமார் உட்பட பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 

தஞ்சை மத்திய மாவட்ட திமுக சார்பில் நடந்த முப்பெரும்  விழாவிற்கு சென்றார் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ .  அவருக்கு முதல்வருக்கு இணையாக வரவேற்பு தடபுடலாக இருந்தது.   விழா நடந்த    கலைஞர் அறிவாலயத்தின் முன்பாக உதயநிதி கார் வந்து நின்றதும்,  தஞ்சை மேயர் சண் ராமநாதன் கூட்டத்திற்கு முன்பாக சென்று நின்றுகொண்டார்.  மேயர் அங்கி அணிந்திருந்த அவருடன் டவாலியும் வந்திருந்தார்.  உதயநிதி ஸ்டாலின் காரை விட்டு இறங்கியதும் அவர் காலில் விழுந்து வணங்கினார்.  இதற்கு ,  உதயநிதி ஸ்டாலினும் மறுப்பு எதுவும் சொல்லாமல் புன்னகை உடனே  நின்று கொண்டிருந்தார்.  ர

இது அங்கிருந்த தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.   தஞ்சை மாநகராட்சியின் மேயர் ஒரு பெருமைக்குரிய பதவியில் இருப்பவர் இப்படி காலில் விழுந்து வணங்குகிறாரே?அதுவும் மேயர் அங்கியை அணிந்து வந்து, டவாலியுடன் வந்து ஒரு மேயர் உதயநிதி காலில் விழுந்து வணங்கிய செயலுக்கு கண்டனங்கள் வலுத்து வந்தன.

’’எம்ஜிஆர் இருக்கும் வரைக்கும் திமுக கோட்டை பக்கம் எட்டிக்கூட பார்க்க முடியவில்லை . அதற்கு அடுத்ததாக ஜெயலலிதா அதிமுகவை இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய இயக்கமாக உருவாக்கினார்.   ’’எங்களை வழிநடத்திச் சென்ற ஜெயலலிதாவின் காலில் விழுவதை  திமுகவினர் கேலி செய்தும் நையாண்டி செய்தும் வந்தார்கள்.   ஆனால், இன்றைக்கு திமுகவில் தன்மானம் சுயமரியாதை எங்கே போனது?  தஞ்சாவூரில் உதயநிதி காலில் மேயேர் அங்கியை அணிந்து கொண்டு ஒரு மேயர் காலில் விழுகிறார்.  அதை கண்டிக்காமல் புன்னகையுடன் ஏற்றுக் கொள்கிறார் ஸ்டாலின்.    காலில் விழுவது சுயமரியாதை  இல்லை என்று விமர்சித்த திமுக இதற்கு என்ன விளக்கம் சொல்லப் போகிறது?மேயர் அங்கியுடன் பொதுவெளியில் காலில் விழும் உரிமையை யார் கொடுத்தது? இந்த கலாச்சாரம் தான் திராவிட மாடலா?’’என்று கேட்கிறார் முன்னாள் அதிமுக அமைச்சர் உதயகுமார் உதயகுமார்.  

க

 உதயநிதியின் தீவிர விசுவாசியான சண் ராமநாதனிடம் இதுகுறித்த கேள்விக்கு,    ’’உதயநிதியை பார்த்ததுமே எமோஷனல் ஆகிட்டேன்.  உதயநிதி தான் எங்கள் கடவுள்.  அதுமட்டுமல்லாது அவரை என் அப்பாவாகவும்  அண்ணனாகவும் பாவிக்கிறேன்.  அதனால் தான் காலில் விழுந்தேன்’’ என்று சொல்லி இருக்கிறார்.

 கடவுள் இல்லை என்கிற கொள்கையின் அடிப்படையில் உள்ள கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எப்படி கடவுளானார்? என்ற கேள்விக்கு எந்த  பதில் சொல்ல மறுத்திருக்கிறார் சண் ராமநாதன்.