அண்ணாமலைக்கு எப்படி தெரிந்தது? அந்த கருப்பு ஆடுகளை தேடும் முதல்வர்

 
as

அண்ணாமலைக்கு எப்படி தெரிந்தது என்று அரசு உயர் அதிகாரிகள் மீது முதல்வர் ஸ்டாலின் கடும் கோபத்தில் இருப்பதாக சொல்கிறது கோட்டை வட்டார.
அரசின் கொள்கை முடிவுகள் எப்படி வெளியே கசிந்தது என்றுதான் அவர் கடும் அப்செட்டில்  இருக்கிறாராம் முதல்வர்.

 ஜெயின் சார்ஜ் கோட்டையில் இயங்கி வரும் தமிழக சட்டமன்றத்தை மாமல்லபுரத்துக்கு மாற்றும் பணிகளில் இறங்கி இருக்கிறது திமுக அரசு.   இதற்காக 6000 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு புதிய சட்டமன்றத்தை அமைக்கும் வேலைகளை துவங்குவது தொடர்பாகவும் அரசாணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது என்று அண்மையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்து இருந்தார்.

ass

அவர் மேலும்,   கோபாலபுரம் குடும்பத்தில் இருக்கும் நான்கு பேர் சம்பாதிப்பதற்காக புதிய சட்டமன்றத்தை அமைக்க முயற்சிக்கிறார்கள்.  இதனை பாஜக ஒருபோதும் அனுமதிக்காது.   மாமல்லபுரத்தில் ஒரு செங்கல்லை கூட வைக்க விடமாட்டோம் என்று எச்சரிக்கை வைத்திருந்தார்.

 அண்ணாமலையின் இந்த எச்சரிக்கைக்கு  பின்னர் முதல்வர் படு அப்சைட்டில் இருக்கிறாராம்.  இந்த விஷயத்தை தான் அறிவிப்பதற்கு முன்பே அண்ணாமலைக்கு எப்படி தெரிந்தது? அரசின் கொள்கை முடிவுகள் எப்படி வெளியே கசிந்தன என்று அரசு உயர் அதிகாரிகள் மீது கடும் கோபத்தில் இருக்கிறார் முதல்வர் என்கிறது கோட்டை வட்டாரம்.

 திமுக -அதிமுக இரண்டு கட்சிகளுக்கும் ஆதரவாக செயல்படும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் எல்லா ஆட்சியிலும் உண்டு.   ஆளுங்கட்சி மீது அதிருப்தியில் இருக்கும் சில உயர் அதிகாரிகள் மூலமாகத்தான் எதிர்க்கட்சி ஆதரவு மனநிலையில் இருக்கும் அதிகாரிகள் வாயிலாகவோ அரசின் இப்படியான முக்கிய கொள்கை முடிவுகள் வெளியே கசிந்து விடுவதாக சொல்கிறது கோட்டை வட்டாரம் .

புதிய சட்டப்பேரவை விஷயத்தில் தான் அறிவிப்பதற்கு முன்பாகவே அண்ணாமலைக்கு தெரிந்து விட்டதால்,  அண்ணாமலைக்கு தகவல் தந்த அந்த கருப்பு ஆடுகள் யார் என்பதை உடனடியாக கண்டறியும் மும்முரத்தில் இருக்கிறாராம் முதல்வர்.   அரசின் கொள்கை முடிவுகள் இனி ஒரு முறை இப்படி வெளியே கசிந்து விடக்கூடாது என்பதற்காகத்தான்,   மிகவும் தீவிரமாக இந்த விஷயத்தில் அந்த கருப்பு ஆடுகளை தேடி வருகிறாராம்.