ஒரே இரவில் தாவூத் இப்ராஹிம் கூட புனிதராவது எப்படி? உத்தவ் தாக்கரேவின் வஞ்சப்புகழ்ச்சி

 
உட்

 ஒரே இரவில் தாவூத் இப்ராஹீம் கூட புனிதர் ஆகிவிடுவார்.  அது எப்படி என்பது குறித்து மகாராஷ்டிரா முதல்வர் உத்த உத்தாக்கரே விமர்சித்து இருக்கிறார்.  வஞ்சப்புகழ்ச்சி பாடியிருக்கிறார். 

 மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வர் உத்தவ் தாக்கரே மும்பையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசியுள்ளார்.   அப்போது அவர்,   தாவூத் இப்ராஹிம் அவனது கூட்டாளியை அரசு தேடிக் கொண்டிருக்கிறது.  ஒருவேளை அவர் பாஜகவில் இணைந்து விட்டால் ஒரே நாள் இரவில் அவரை புனிதராக மட்டுமல்ல,  அமைச்சராகவும் மாற்றி விடுவார்கள் என்று விமர்சித்துள்ளார்.

உட்

அவர் மேலும்,   பாஜக ஆட்சி குறித்து பேசிய போது,   குதிரையின் மோகத்தில் எங்களுடன் இருந்த கழுதையை எட்டி உதைத்து இரண்டரை வருடங்களுக்கு முன் வெளியே வந்துவிட்டோம்.  சிலிண்டர் விலை விண்ணை முட்டுகின்ற வகையில் இருக்கும்போது பிரதமர் மோடி கொடுத்த ரேஷன் பொருட்களை எப்படி சமைத்து சாப்பிட முடியும் ? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.  பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால் 25 ஆண்டுகளை சிவசேனா வீணடித்து விட்டது என்றும் தெரிவித்திருக்கும் உத்தவ் தாக்கரே,  தேசிய பாதுகாப்பு முகமை தாவூத் கூட்டாளிகள் மீதான் தேடுதல் வேட்டையை தொடங்கி இருக்கிறது. 

 நிழல் உலக தாதா தாவுத் இப்ராகிமுடன் தொடர்புடையவர்கள் என்று கருதப்படுகின்ற பலருக்கும் சொந்தமான இடங்களில் தேசிய பாதுகாப்பு முகாமை சோதனை நடத்தி இருக்கிறது .  பிப்ரவரி மாதத்திலேயே பதிவு செய்யப்பட்டிருக்கும் ஒரு வழக்கின் அடிப்படையில் இந்த சோதனைகள் நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .

உ

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு அமைச்சர் உட்பட பலர் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக எழுந்த புகார்களின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.   தற்போது சோதனைகள் நடந்து வருகின்றன என்பதை தெரிவித்திருக்கிறார் உத்தவ் தாக்கரே.