அவரின் தோல் தான் உரிந்து போய் இருக்கிறது -மாஜி முதல்வர் மீது உள்துறை அமைச்சர் தாக்கு

 
nஅ

நாராயணசாமி பேசியது நாகரீகமற்ற செயல் என்கிறார் புதுச்சேரி மாநிலத்தின் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்.   மேலும் , முன்னாள் முதல்வர் நாராயணசாமி என் வாழ்நாள் உள்ள வரையில் மாநில அந்தஸ்தை ஆதரிக்க மாட்டேன் என்று ஏனாம் மக்களுக்கு கடிதம் எழுதிக் கொடுத்திருக்கிறார் என்றும் குற்றம் சாட்டியிருக்கிறார்.

 புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்று தற்போதைய முதல்வர் ரங்கசாமி போராடிவரும் நிலையில் மாநில அந்தஸ்தை ஆதரிக்க மாட்டேன் என்று நாராயணசாமி கடிதம் எழுதிக் கொடுத்திருப்பது குறித்தும்,   அமைச்சர் நமச்சிவாயம் மேலும் புதுச்சேரி மாநிலத்தின் சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் காங்கிரஸ் கட்சியை பற்றியோ என்னை பற்றியோ பேசினால் தோலை உரித்து விடுவேன் என்று நாராயணசாமிக்கு மிரட்டல் விடுத்து பேசி இருப்பது குறித்து உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

ன

 நாராயணசாமி அமைச்சர் லட்சுமி நாராயணன் தோலை உரிப்பேன் என்று பேசியது நாகரிகமற்ற செயல்.  அவர் தனது பேச்சை வாபஸ் பெற வேண்டும்.  அவர் என்ன செய்தார் என்பதை வெளியிவிட ரொம்ப காலமாக வெளியிட ஆகாது மாநில அந்தஸ்து குறித்து ஏனாம் மக்களுக்கு நாராயணசாமி கடிதமே எழுதிக் கொடுத்திருக்கிறார்.

 என் வாழ்நாள் உள்ள வரையிலும் மாநில அந்தஸ்தை ஆதரிக்க மாட்டேன் என்று அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார் .  அதனால் அவரின் தோல் தான் உரிந்து போய் இருக்கிறது.  முதலமைச்சராக இருந்து விட்டு சட்டமன்றத் தேர்தலில் நிற்க கூட திராணியில்லாமல் பயந்து  ஒதுங்கியவர் நாராயணசாமி. அவர் தோலை மக்கள் உரித்து இருக்கிறார்கள்.  நாங்கள் மக்களோடு மக்களாக அவளுக்கு தேவையான பணிகளை செய்து வருகிறோம் என்கிறார்.