என் மனைவி ஒரு பைசா கூட சம்பாதிக்கவில்லை.. வழக்கை சந்திக்க தயாரா இருங்க.. சிசோடியாவுக்கு பதிலடி கொடுத்த அசாம் முதல்வர்

 
ஹிமாந்தா பிஸ்வா சர்மா

நீங்கள் குற்றவியல் அவதூறுகளை சந்திக்க நேரிடும் என்பதால் நான் உங்களை கவுகாத்தியில் சந்திப்பேன் என தன் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்திய மணீஷ் சிசோடியாவுக்கு அசாம் முதல்வர் பதிலடி கொடுத்துள்ளார்.

டெல்லி துணை முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான மணீஷ் சிசோடியா, அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஊழலில் ஈடுபட்டார் என குற்றம் சாட்டினார். இது தொடர்பாக மணீஷ் சிசோடியா கூறுகையில், 2020ம் ஆண்டில் ஹிமந்தா பிஸ்வா சர்மா அசாம் சுகாதார துறை அமைச்சராக இருந்தபோது, பி.பி.இ. கருவிகளுக்கான ஒப்பந்தங்களை அவரது மனைவிக்கு சொந்தமான நிறுவனத்துக்கும், அவரது மகனின் வணிக கூட்டாளிகளுக்கு சொந்தமான பிற நிறுவனங்களுக்கும் வழங்கினார் என குற்றம் சாட்டினார்.

பா.ஜ.க. ஆளும் மாநிலங்களை குறிவைக்கும் ஆம் ஆத்மி… உத்ரகாண்ட் பா.ஜ.க. முதல்வரை விமர்சித்த சிசோடியா

மணீஷ் சிசோடியா ஊழல் குற்றச்சாட்டு கூறிய அடுத்த சில மணி நேரங்களில் அவருக்கு அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பதிலடி கொடுத்தார். ஹிமந்தா பிஸ்வா சர்மா இது தொடர்பாக டிவிட்டரில் தொடர்ச்சியான டிவிட்டுகளில், 100 ஆண்டுகளுக்கும் மேலாக காணாத மிக மோசமான தொற்றுநோயை முழு நாடும் எதிர்க்கொண்ட நேரத்தில், என் மனைவி தைரியமாக முன்வந்து, உயிர்களை காப்பாற்றுவதற்காக சுமார் 1500 கருவிகளை அரசுக்கு இலவசமாக வழங்கினார்.  அவள் ஒரு பைசா கூட வாங்கவில்லை.

பி.பி.இ. கிட்ஸ்

பிரசங்கம் செய்வதை நிறுத்துங்கள், நீங்கள் குற்றவியல் அவதூறுகளை சந்திக்க நேரிடும் என்பதால் நான் உங்களை கவுகாத்தியில் சந்திப்பேன் என பதிவு செய்து இருந்தார். மணிஷ் சிசோடியாவின் குற்றச்சாட்டும், ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் பதிலடியும் அசாம் அரசியலில் புதிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.