உங்கள் குழந்தைகளுக்கு குர்ஆனை கற்றுக் கொடுங்கள், ஆனால் வீட்டில்.... அசாம் முதல்வர் பேச்சால் பரபரப்பு

 
ஹிமாந்தா பிஸ்வா சர்மா

உங்கள் குழந்தைகளுக்கு குர்ஆனை கற்றுக் கொடுங்கள், ஆனால் வீட்டில் என அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அசாமில் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மலா தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பேசுகையில் கூறியதாவது: மதராசா என்ற வார்த்தை இருக்கும் வரை குழந்தைகளால் டாக்டர், என்ஜினீயர் ஆக வேண்டும் என நினைக்க முடியாது. மதராசாக்களில் படித்தால் டாக்டரோ, என்ஜினீயரோ ஆக மாட்டோம் என்று சொன்னால், அவர்களே அங்கு செல்ல மறுப்பார்கள். 

மதராசா

உங்கள் குழந்தைகளுக்கு குர்ஆனை கற்றுக் கொடுங்கள், ஆனால் வீட்டில். குழந்தைகளை மதராசாக்களில் சேர்ப்பது அவர்களின் மனித உரிமை மீறலாகும். அனைத்து குழந்தைகளுக்கும் அறிவியல், கணிதம், உயிரியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களை கற்பிப்பதில் அழுத்தம் இருக்க வேண்டும் ஆனால் அவர்கள் டாக்டர்கள், பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளாக ஆக படிக்க வேண்டும். அனைத்து முஸ்லிம்களும் இந்துக்கள். இந்தியாவில் யாரும் முஸ்லிமாக பிறக்கவில்லை. 

குரான் குறித்து சர்ச்சை கருத்து.. ஷியா மத்திய வக்பு வாரியத்தின் முன்னாள் தலைவருக்கு வலுக்கும் எதிர்ப்பு

இந்தியாவில் அனைவரும் இந்துக்கள். எனவே ஒரு முஸ்லிம் குழந்தை மிகவும் திறமையானதாக இருந்தால், நான் அவருடைய கடந்த இந்து காலத்துக்கு ஒரளவு மதிப்பு அளிப்பேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். 2020ம் ஆண்டில் அசாம் அரசாங்கம் மதச்சார்பற்ற கல்வி முறை வசதியை வழங்குவதற்காக, அரசாங்கத்தால் நடத்தப்படும் அனைத்து மதராசாக்ளையும் கலைத்து பொது கல்வி நிறுவனங்களாக மாற்ற முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.